அண்மையில் சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் மியன்யாங் நகரிலுள்ள பீங்வூ வட்டத்தில் ஒரு ஊரில் பச்சை பிளம் மலர்கள் மலர்ந்துள்ளன. அவற்றின் வாசனை அருமையாக இருக்கிறது. அங்குள்ள அழகான காட்சிகள் உங்களுக்காக.
சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்திலுள்ள சம்தோ மாவட்டத்தில் ஒரு பெரிய பனிக் குகை கண்டறியப்பட்டது. 165 மீட்டர் நீளம், 26 மீட்டர் அகலம் மற்றும் 15 மீட்டர் உயரமுள்ள இக்குகை, தற்போது திபெத்தில் கண்டறியப்பட்டுள்ள பனிக்குகைகளில் மிகப் பெரியதானது.
தற்போது சீனாவின் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்துலுள்ள ஹேமுநாஸ் மங்கோலிய இன ஊர் இன்னும் பனியால் மூடப்பட்டது. சில சமயம் வெள்ளை நிறமான பனியில் குட்டிச்சாத்தானான சிவப்பு நரிகளைப் பார்க்க முடியும்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, ஹாங்காங், மக்காவ் மற்றும் தைவானின் பெண்கள் சங்கம், சீனாவுக்கான 170க்கும் மேற்பட்ட நாடுகளின் தூதரகங்கள், சீனாவிலுள்ள சர்வதேச அமைப்புகளின் நிறுவனங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட அமைப்புகளுக்கும் தனிநபர்களுக்கும் அனைத்து சீன மகளிர் சம்மேளனம் அருமையான வாழ்த்துக்களைத் தெரிவித்தது.
அமெரிக்கச் செய்தி ஊடக நிறுவனம் வெளியிட்ட செய்தியின் படி, அமெரிக்கத் துப்பாக்கி வன்முறை பதிவேடுகள் என்றும் அமைப்பின் புதிய தரவுகளின் படி, இந்த ஆண்டில் இதுவரை அமெரிக்காவில் 100க்கும் மேற்பட்ட பெரிய அளவிலான துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன.
சீனா பற்றி அமெரிக்காவின் கருத்து மற்றும் நிலைப்பாடு முற்றிலும் தவறானது. சீனாவை முக்கிய எதிரியாகவும் மிக கடுமையான அறைகூவலாகவும் அமெரிக்கா கருதுவதால் சீனாவின் மீதான அதன் கொள்கை அறிவார்ந்த சரியான பாதையிலிருந்து விலகிச் செல்கிறது என்று குறிப்பிட்டார்.
மார்ச் 7ஆம் நாள் முற்பகல், சீனாவின் 14ஆவது தேசிய மக்கள் பேரவையின் முதல் கூட்டத்தொடரின் செய்தியாளர் சந்திப்பில் சீன வெளியுறவு அமைச்சர் சின் காங், சீன தூதாண்மை கொள்கை மற்றும் வெளிநாட்டுறவு குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்
சீனா, உலகின் மிகப்பெரிய தேயிலை உற்பத்தி நாடாகும். தற்போது, பல்வேறு இடங்களில் வசந்தகால தேயிலை அறுவடை காலமாகும். உள்ளூர் விவசாயிகள் சுறுசுறுப்பாக வேலை செய்து வருகின்றனர்.
நோர்ஃபோக் தெற்கு ரயில்வே நிறுவனம், ஓஹியோ மாநில அரசு மற்றும் மத்திய அரசு ஆகியவை கிழக்குப் பாலஸ்தீன நகரத்தில் விபத்துக்குள்ளான தொடர்வண்டியிலிருந்து கசிந்த வேதி பொருட்களால் மாசுப்படுத்தப்பட்ட மண்ணை எரிப்பதற்காக எரி ஆலைக்குக் கொண்டு செல்வதாக தி கார்டியன் எனும் பிரிட்டன் செய்தித்தாள் 4ஆம் நாள் செய்தி வெளியிட்டது. இச்செயலால் உள்ளூர் மக்கள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.
நடப்பாண்டில் சீன உள் நாட்டு உற்பத்தி மதிப்பு அதிகரிப்பின் இலக்கு கிட்டத்தட்ட 5 விழுக்காடாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மார்ச் 5ஆம் நாள் காலை சீன தலைமை அமைச்சர் லீ கெச்சியாங் அரசு பணியறிக்கையில் தெரிவித்தார்.
சீனாவின் ஆன்ஹுய் மாநிலத்திலுள்ள போசோ நகரிலுள்ள ஒரு தோட்டத்தில், பணியாளர்கள் ஆளில்லா விமானத்தின் மூலம் கோதுமையின் மீது பூச்சிக் கொல்லி மருந்தைத் தெளிக்கும் காட்சி.
மார்ச் 4ஆம் நாள், சல்வடோரிலுள்ள சன் சல்வடோர் நகரில் இந்தியத் தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹோலி விழாக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.
மிகவும் வளர்ச்சி குறைந்த நாடுகளுக்கான ஐ.நா. உச்சி மாநாடு 4ஆம் நாள் சனிக்கிழமை கத்தாரின் தலைநகர் டோஹாவில் நடைபெற்றது. ஐ.நா. தலைமைச் செயலாளர் குட்ரெஸ், மிகவும் வளர்ச்சி குறைந்த 46 நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
வறுமை ஒழிப்பு, காலநிலை மாற்ற சமாளிப்பு, அறிவியல் தொழில் நுட்ப புத்தாக்கம் முதலிய கருப்பொருட்கள் குறித்து கலந்தாய்வு மற்றும் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டன.
இந்த ஒத்துழைப்பு தொடர்ச்சியாகவும் ஆழமாகவும் விரிவாகி வருவதுடன், பல நாடுகளின் பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்பு அதிகரிப்பு, மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பாடு ஆகியற்றில் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை ஆற்றி வருகிறது.
சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14வது தேசிய கமிட்டியின் முதலாவது கூட்டத்தொடர் மார்ச் 4ஆம் நாள் பிற்பகல் 3:00 மணிக்கு மக்கள் மாமண்டபத்தில் துவங்கவுள்ளது. இது மார்ச் 11ஆம் நாள் பிற்பகல் நிறைவடையும்.
சீன வெளியுறவுத் துறை அமைச்சர் சின் காங், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது, இருதரப்பு உறவுகளை மேம்படுத்த இரு தரப்பினரும் உறுதியளித்தனர்.
சாத்தியமான முதலீட்டாளர்களை ஈர்க்க நாட்டின் பிரதிநிதிகளை நியமித்துள்ளதாக இலங்கை முதலீட்டு ஊக்குவிப்புத் துறை அமைச்சர் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா ஆகியவை உருவாக்கும் குவாட் கூட்டமைப்பு பிராந்திய அமைதி மற்றும் நிதானத்தைப் பேணிக்காப்பதற்கு நன்மை பயப்பதில் ஈடுபட வேண்டும்
ஜனவரி மாத மண்ணெண்ணெய் விலைக் குறைப்பிற்கு பிறகு, மீண்டும் விலையை குறைக்க, அரசாங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் இறக்குமதி மற்றும் விநியோகஸ்தரான இலங்கை பெற்றோலிய நிறுவனத்தின் முன்மொழிவுக்கு இலங்கை அரசுத்தலைவர் ரணில் விக்கிரமசிங்க புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளார்.
வளர்ச்சிக்கான உரிமை பற்றிய அறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டதன் 35ஆம் ஆண்டு நிறைவை நினைவுகூரும் விதம், ஜ.நா. மனித உரிமை கவுன்சில் உயர் நிலை கூட்டத்தை நடத்தியது.
“நியூ ஸ்டாட்”என்னும் ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்துவது பற்றிய சட்டத்தில் ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின் கையொப்பமிட்டார்.
உணவுப் பாதுகாப்பு தொடர்பான 236 வரைவுத் தீர்மானங்கள் மற்றும் முன்மொழிவுகளை சீன வேளாண் மற்றும் ஊரக அமைச்சகம் தனித்தனியாக ஆராய்ந்து உணர்வுபூர்வமாகச் செயல்படுத்தியுள்ளது.
ஜி 20 அமைப்பின் நடப்புத் தலைவர் நாடான இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்ஷாங்கரின் அழைப்பின் பேரில் சீன வெளியுறவு அமைச்சர் சின் காங் மார்ச் 2ஆம் நாள் இந்தியாவின் புதுதில்லியில் நடைபெறவுள்ள ஜி 20 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார்.
பூர்வாங்க கணக்கீட்டின்படி, 2022ஆம் ஆண்டு சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 1 கோடியே 21 லட்சத்து 2070 ஆயிரம் கோடி யுவானை எட்டி, முந்தைய ஆண்டை விட 3.0 விழுக்காடு அதிகரித்தது.
தொழில் நிறுவனங்களின் வழியாக, சீனா, ரஷியாவுக்கு கொல்லும் தன்மை அல்லாத உதவியை வழங்கி வருகிறது. தற்போது சீனா கொல்லும் தன்மை வாய்ந்த உதவியை வழங்குவதைக் கருத்தில் கொள்வதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ப்லிங்கன் அண்மையில் கூறினார்.
நடைபெறவுள்ள ஐ.நா.வின் மனித உரிமை பேரவையின் 52வது கூட்டம் பற்றி சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறுகையில், சீனா மனித உரிமை வளர்ச்சியின் பாதையில் ஊன்றி நிற்கின்றது என்று தெரிவித்தார்.
அமெரிக்காவின் பல இடங்களில் கடந்த வாரம் ஏற்பட்ட குளிர்கால புயலால் மின்தடை ஏற்பட்டது. மிச்சிகன் மாநிலத்தின் தென்கிழக்கிலுள்ள சில பகுதிகளின் மின் வினியோகம் இன்னும் சரிசெய்யப்படவில்லை.
உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதை எதிர்த்து, அமைதி முறையில் பிராந்தியச் சர்ச்சையைத் தீர்க்க வேண்டுகோள் விடுக்கும் வகையில், பல்லாயிரக்கணக்கான ஜெர்மன் மக்கள், 25ஆம் நாள் தலைநகர் பெர்லினில் பெருமளவிலான ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பிப்ரவரி 25ஆம் நாள் பெய்ஜிங் சர்வதேச பெருந்தரவு சந்தையில் தொழிற்துறை சார்ந்த தரவுககளுக்கான மேடை பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இம்மேடை மூலம், தொழில் துறைக்குத் தரவுகளின் பரிமாற்றச் சேவை வழங்கப்படும்.
இந்தியாவும் ஜெர்மனியும் சனிக்கிழமை அன்று புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு, பசுமை ஹைட்ரஜன் மற்றும் தூய்மையான எரிசக்தி தொழில்நுட்ப ஒத்துழைப்பு சார்ந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.
சீனப் பாரம்பரிய மருத்துவச் சேவை அமைப்புமுறையை வலுப்படுத்தும் வகையில், 2023ஆம் ஆண்டு சீனா பல செயற்பாட்டுத் திட்டங்களையும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளது.
உக்ரைன் மோதல் பற்றி சீனா வெளியிட்டுள்ள நிலைப்பாட்டு ஆவணத்துக்குப் பன்னாட்டுப் பிரமுகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். சீனா முன்வைத்த இந்த ஆவணம், ஒரு பெரிய நாட்டின் பொறுப்பை எடுத்துக்காட்டுகிறது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
உக்ரைன் மோதல் பற்றி சீனா வெளியிட்டுள்ள நிலைப்பாட்டு ஆவணம் முக்கியமான பங்காகும் என்று ஐ.நா பொதுச்செயலாளரின் செய்தித் தொடர்பாளர் டியாலிக் 24ஆம் நாள் தெரிவித்தார்.
இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி 24ஆம் நாள், ஜி20 நாடுகள் குழுவின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கித் தலைவர்களின் கூட்டத்தில் காணொளி வழியாக உரை நிகழ்த்தினார்.
உக்ரைன் நெருக்கடி தீவிரமாகிய ஓராண்டு காலத்தில் உலக வர்த்தகத்துக்கு ஏற்பட்ட தாக்கத்தை கணிக்கும் விதமான அறிக்கை ஒன்றை, உலக வர்த்தக அமைப்பு பிப்ரவரி 23ஆம் நாள் வெளியிட்டது.
பிரிட்டனில் ஏற்பட்டுள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளின் பற்றாக்குறை சுமார் ஒரு மாத காலத்துக்கு நீடிக்கும் என்று பிரிட்டனின் சுற்றுச்சூழல் அமைச்சர் தெரசா காஃபி அம்மையார் உள்ளூர் நேரப்படி பிப்ரவரி 23ஆம் நாள் தெரிவித்தார்.
சீனாவில் அந்நிய முதலீடு நிலையான வளர்ச்சியை நிலைநிறுத்தி வருகின்றது. பெரும்பாலான பன்னாட்டு நிறுவனங்கள் சீனாவில் நீண்டகாலமாக வளர்ச்சியடைய விரும்புவதை இது முழுமையாகக் காட்டியுள்ளது என்று சீன வணிக அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஷு யூட்டிங் அம்மையார் 23ஆம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார்.
ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் உறுப்பினர் மைக் வால்லேஸ் 22ஆம் நாள் சீன ஊடகக் குழுமத்தின் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், கடந்த ஓராண்டில், ஐரோப்பிய ஒன்றியம் ரஷியாவின் மீது பல சுற்று தடை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும், இது, ஐரோப்பிய சமூகத்திலும் பொருளாதாரத்திலும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அமெரிக்க நிலவியல் ஆய்வு பணியகம் வெளியிட்ட தகவல்படி, 23ஆம் நாள் தாஜிக்ஸ்தானின் கிழக்கு பகுதியில் ரிக்டர் அளவு கோலில் 6.8ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் மையம், 14 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்தது.
எதிர்வரும் சில ஆண்டுகளில் கொழும்பு துறைமுக நகரத் திட்டப்பணி மூலம் சுமார் 87 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார்.
நேட்டோவில் சேர்வது தொடர்பாக, ஸ்வீடன், ஃபின்லாந்து மற்றும் துருக்கிக்கு இடையிலான பேச்சுவார்த்தை, மார்ச் திங்களில் மீண்டும் நடைபெறவுள்ளதாக ஸ்வீடன் தலைமை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசத்தின் அல்க்ஸா லீக் பகுதியில் நிலக்கரி சுரங்கம் ஒன்று 22ஆம் நாள் இடிந்து விழுந்த விபத்து குறித்து சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் உத்தரவு பிறப்பித்தார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் வெளிவிவகார ஆணையப் பணியகத்தின் இயக்குநர் வாங்யீ, 21ஆம் நாள்மாஸ்கோவில், ரஷிய கூட்டாட்சிப் பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் பாத்லுயேவுடன் சீன-ரஷிய நெடுநோக்கு பாதுகாப்பு கலந்தாய்வு அமைப்பின் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின் 21ஆம் நாள் ரஷிய நாடாளுமன்றத்தில் ஆண்டுக்கான அறிக்கையை வழங்கினார். சிறப்பு ராணுவ நடவடிக்கை, நவீன சர்வதேச உறவு, புதிய புவிசார் அரசியலிலுள்ள ரஷிய பொருளாதாரம், சமூக வளர்ச்சி முதலியவை இவ்வறிக்கையின் முக்கிய பகுதிகளாகும்.
சீனா தொடர்ந்து பல்வேறு நாடுகளுடன் ஒத்துழைத்து, பசுமையான வளர்ச்சிக்கான ஒத்த கருத்துக்களை உருவாக்கி, மேலும் தூய்மையான மற்றும் அழகான உலகத்தை கட்டமைப்பதற்குப் பாடுபடும்.
எதிர்பாராத நிலையில் எதேச்சையாக நிகழ்ந்த சம்பவத்தை அரசியலுடன் இணைத்து அதனைச் சிக்கலாக்கும் அமெரிக்க நாடாளுமன்றத்தின் இச்செயல், தெளிவான மேலாதிக்கச் செயலாகும்.
உலக பாதுகாப்பு முன்மொழிவு:பாதுகாப்பு குழப்ப நிலையைத் தீர்க்கும் சீனாவின் திட்டம் பற்றிய கருத்தருங்கு 21ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. இதில் சீன வெளியுறவு அம்மைச்சர் சின் கேங் கூறுகையில், உலகப் பாதுகாப்பு முன்மொழிவு பற்றிய ஆவணத்தைச் சீனா அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.
நார்ட் ஸ்ட்ரீம் குழாய் வெடிப்பின் உண்மையைப் புலனாய்வு செய்ய வேண்டிய உரிமை சர்வதேச சமூகத்திற்கு உண்டு என்று இத்தாலியின் சுதந்திர பத்திரிக்கையாளர் கிராசிஸ் தெரிவித்தார்.
நார்ட் ஸ்ட்ரீம் குழாய்களை வெடித்து தகர்த்தும் நோக்கத்தையும் அதற்கான தொழில் நுட்பத்தையும் கொண்டுள்ள ஒரேயொரு நாடு அமெரிக்கா என்று பேராசிரியர் ஜெஃப்ரி சாக்ஸ் தெரிவித்தார்.
38ஆவது சீன-ஐரோப்ப மனித உரிமை பேச்சுவார்த்தை பற்றி சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் வாங் வென்பின் 20ஆம் நாள் கூறுகையில்,இப்பேச்சுவார்த்தையில் மக்களை மையமாக கொண்ட சீனாவின் மனித உரிமை கருத்து அறிமுகப்படுத்தப்பட்டது என்றார்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் 19ஆம் நாளிரவு பயணித்துக் கொண்டிருந்த பேருந்து ஒன்று எதிரில் வந்து கொண்டிருந்த வாகனங்களின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
சீன ஊடகக் குழுமம், சீன வெளியுறவு அமைச்சகம், பண்பாடு மற்றும் சுற்றுலா துறை அமைச்சகம் ஆகியவை கூட்டாக நடத்திய சீன ஆவணப்பட விழாவின் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதைப் பிரிவு பிப்ரவரி 20ஆம் நாள் இணையவழியில் அதிகாரப்பூர்வமாக ஒளிப்பரப்புத் துவங்கியது.
59ஆவது மியூனிக் பாதுகாப்புக் கூட்டம் 19ஆம் நாள் நிறைவடைந்தது. இக்கூட்டத்தில் 2023ஆம் ஆண்டின் மியூனிக் பாதுகாப்பு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ரஷிய-உக்ரைன் மோதல், உயர் பண வீக்கம், எரிசக்தி நெருக்கடி, அணுசக்தி பாதுகாப்பு ஆகிய பிரச்சினைகள் புதிய உலகளாவிய பாதுகாப்பு கவலைகளாக மாறியுள்ளன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிச்சுவான் மாநிலத்தின் மே ஷென் நகரிலுள்ள இஞ்சி சாகுபடி தோட்டத்தில், “கூட்டுறவு சங்கம்+ விவசாய் குடும்பம்” எனும் மேலாண்மை மற்றம் நிர்வாக வழிமுறை மேற்கொள்ளப்படுகிறது.
சீனாவில் மழை நீர் எனும் தினம் நேற்று வந்தது. அதன் பின், மழை பெய்ய தொடங்கி, மழைப்பொழிவு அதிகரிக்கும்.வேறுபட்ட பறவைகள் மலர்களிடையே சுற்றி பறக்கிறது. இது வசந்தகாலத்தின் வருகையை குறிக்கிறது.
கூறப்படும் வான்கப்பல் சம்பவம் தொடர்பாக சீனாவின் நிலைப்பாட்டை வாங் யீ தெளிவுப்படுத்தியதோடு, அமெரிக்கா தனது செயல்முறையை மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இலங்கை மின்வாரியம் அண்மையில் 66% மின் கட்டண உயர்வை நடைமுறைப்படுத்தியது. இந்த அதிகரிப்பு காரணமாக தினசரி மின்வெட்டு நடவடிக்கையை நிறுத்த இலங்கை வியாழக்கிழமை முடிவு செய்தது.
அமெரிக்க நாடாளுமன்றம் சீனா மீது அவதூறு பரப்புவதை நிறுத்தி, இந்நிகழ்வை மேலும் தீவிரமாக்காமல் தவிர்க்குமாறு நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம் என்று வாங் வென் பின் தெரிவித்தார்.
தைவான் பிரதேசத்திற்கு ஆயுத விற்பனையில் கலந்து கொள்ளும் லாக்கீட் மார்டின், ரேதியோன் ஏவுகணைகள் மற்றும் பாதுகாப்பு ஆகிய நிறுவனங்களை நம்பகமற்ற நிறுவனப் பட்டியலில் இணைக்க சீன வணிக அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
சீனாவின் சிவில் பயன்பாட்டுக்கான ஆளில்லா வான்கப்பல் வழிதவறி அமெரிக்காவின் வான் எல்லைக்குள் நுழைந்தது, தடுக்க முடியாத நிலையில் எதிர்பாராதவாறு ஏற்பட்ட சம்பவமாகும்.
பிரான்ஸில் பாரிஸ், சீன் மாநிலம், செயிண்ட்-டெனிஸ் மாநிலம் ஆகியவற்றிலுள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் திடல்களையும் அரங்குகளையும் இணைப்பதற்காகக் கட்டியமைக்கப்படும் சுமார் 60 கிலோமீட்டர் நீளமுள்ள சைக்கிள் பாதை 2024ஆம் ஆண்டின் ஜூலைக்குள் திறக்கப்படும்.
தேசிய அளவில் 31 இடங்களில் தொல்லியல் அகழ்வு பணிகளைத் தொடங்க இந்தியத் தொல்லியல் துறை ஒப்புதல் அளித்துள்ளதாக அதிகாரி ஒருவர் பிப்ரவரி 15ம் நாள் தெரிவித்தார்.
நிதியுதவித் திட்டத்துக்கு சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குநர் குழு மார்ச் மாதத்துக்குள் ஒப்புதல் அளிக்கும் எனத் நம்புவதாக இலங்கை அரசுத் தலைவர் தெரிவித்தார்.
பிப்ரவரி 15ஆம் நாள் பிரான்ஸ் அரசுத் தலைவர் இம்மானுவேல் மக்ரோன் பாரிஸில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் மத்தியக் கமிட்டியின் வெளிவிவகார ஆணைய அலுவலகத்தின் தலைவருமான வாங் யீயுடன் சந்திப்பு நடத்தினார்.
சீனாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பைச் சீர்குலைப்பதுடன் தொடர்புடைய அமெரிக்க நிறுவனங்கள் மீது சீனா சட்டப்படி பதிலடி நடவடிக்கை அளிக்கும் என்று சீன வெளியுறவு அமைச்சகம் 15ஆம் நாள் தெரிவித்துள்ளது.
சிரியா நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர மனித நேய உதவிக்காக, சர்வதேச சமூகம் 39.7 கோடி அமெரிக்க டாலர் நன்கொடை செய்ய வேண்டுமென ஐ.நா பொதுச் செயலாளர் குட்ரேஸ் 14ஆம் நாள் வேண்டுகோள் விடுத்தார்.
ஹெபே மாநிலத்தின் செங்டே நகரிலுள்ள பள்ளி ஒன்றில் நடனம்,மணல் ஓவியம் முதலிய சிறப்பு வருப்புகள் சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிந்றன. இதன் மூலம், மாணவர்களின் பொழுதுபோக்குகளை வளர்த்து, வளாகப் பண்பாட்டு வாழ்க்கையைச் செழிப்பாக்க முடிகிறது.
சீனாவின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த மாணவர்கள் குளிர்கால விடுமுரையைத் தொடர்ந்து பள்ளிகளுக்குத் திரும்பினர். பள்ளியிலுள்ள குழந்தைகளின் சிரிப்பு மற்றும் வாசிப்பு ஒலியும் நான்கு திசைகளிலும் எதிரொலிக்கிறது.
இந்தியாவின் தனியார் விமான நிறுவனமான ஏர் இந்தியா, விரைவில் புதிதாக ஏர்பஸ் நிறுவனத்தின் 250 விமானங்களை வாங்க உள்ளது. இவற்றில் அகலமான மற்றும் நீளமான ஏ350 ரக விமானங்கள் 40-ம், குறுகிய-உடல் கொண்ட விமானங்கள் 210-ம் அடக்கம்.
சீன தேசிய எரியாற்றல் நிர்வாகம் 13ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின் படி, வேகமான வளர்ச்சி, தரமான இயக்கம், உயர் நிலை பயன்பாடு, வலிமைமிக்க போட்டியாற்றல் ஆகிய தனிச்சிறப்புகளை 2022ஆம் ஆண்டில் சீன புதுப்பிக்கவல்ல எரியாற்றல் துறை கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது.
சீன செஞ்சிலுவை சங்கம் சிரியாவுக்கு நன்கொடையாக கொடுத்த 2ஆது தொகுதி மனித நேய உதவி பொருட்கள் பிப்ரவரி 13ஆம் நாள் அந்நாட்டின் தலைநகர் தமாஸ்காஸைச் சென்றடைந்தன.
தொடர்புடைய நாடுகள் நிபந்தனையின்றி ஒருசார்பு தடை நடவடிக்கைகள் அனைத்தையும் உடனடியாக நீக்கி, குழந்தைகளுக்கு வாழும் வாய்ப்பை வழங்க வேண்டும் என்று ஐ.நாவுக்கான சீனப் பிரதிநிதி வேண்டுகோள் விடுத்தார்.
2023ஆம் ஆண்டு சீனாவின் மத்திய ஆவண எண் 1, 13ஆம் நாள் அறிவிக்கப்பட்டது. 2023ஆம் ஆண்டில் கிராமப்புறங்களுக்குப் புத்துயிர் ஊட்டும் திட்டத்தைப் பன்முகங்களிலும் முன்னேற்றும் முக்கியப் பணிகள் குறித்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி மற்றும் சீன அரசவையின் கருத்துக்கள் என்பது இந்த ஆவணத்தின் தலைப்பாகும்.
பிப்ரவரி 13ஆம் நாளிரவு, சீனாவின் ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் மேற்கு சியு லுங் பண்பாட்டுப் பகுதியின் வான்பரப்பில் செயற்கை துருவ ஒளிக் காட்சி வைக்கப்பட்டது.
சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் சாங் து தன்னாட்சி சோவிலுள்ள மாங் காங் மாவட்டத்தில், ஆயிரக்கணக்கான உப்பு வயல்கள் லன் சாங் ஆற்றின் இரு கரைகளில் அமைந்துள்ளன.
220டன் கோதுமைகள் சிரியாவுக்கு அனுப்பப்படும் வழியில் இருக்கின்றன. மற்ற 3000 டனுக்கு மேற்பட்ட அரிசிகளும் கோதுமைகளும் நடப்பு மாதத்தில் கட்டங்களாக அனுப்பப்படவுள்ளன
லா நினா நிகழ்வு 2023ஆம் ஆண்டில் வசந்த காலத்தின் முதலாவது மாதத்துக்குள் முடிவுக்கு வரவுள்ளதாகச் சீனத் தேசிய காலநிலை மையத்திலிருந்து தகவல் தெரிய வந்துள்ளது.
உலக டிஜிட்டல் கல்வி மாநாடு பிப்ரவரி 13ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கவுள்ளது. 2 நாட்கள் நீடிக்கும் இம்மாநாடு நேரடியாகவும் இணையவழியிலும் நடத்தப்படுகின்றது. 130க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்து கொள்வார்கள்.
சீனா-மாலத்தீவு கண் மைய உதவி மற்றும் ஒத்துழைப்பு திட்டத்துக்கான துவக்க விழா 11ஆம் நாளிரவு நடைபெற்றது. இதில், மாலத்தீவின் துணைத் அரசுத் தலைவர் பைசல் நசீம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கிக்குச் சீனா நன்கொடையாக வழங்கிய முதல் தொகுதி உதவிப் பொருட்களான போர்வைகள் மற்றும் கூடாரங்களை ஏற்றிக்கொண்டு, சீனாவிலிருந்து புறப்பட்ட இரு விமானங்கள் பிப்ரவரி 12 ஆம் நாள் இஸ்தான்புல் நகரைச் சென்றடைந்தன.
கிராமப்புறப் பாதைகள், ஊருக்குப் புத்துயிர் ஊட்டும் ரத்தக் குழாய்கள். அழகிய கிராமப்புறப் பாதைகளின் நெடுகில், குடியிருப்பு வீடுகள், தொழில் கூடங்கள் முதலியவை உருவாவது, கிராமவாசிகளின் வாழ்க்கை நிலை பெரிதும் உயர்த்த உதவுகிறது.
நோர்ட்ஸ்ட்ரீம் இயற்கை எரிவாயு குழாய் அமெரிக்க உளவுத் தகவல் அமைப்பு மற்றும் அமெரிக்க இராணுவ வீரர்களால் ரகசியமாக வெடித்து தகர்த்தப்பட்டது என்று அமெரிக்கச் செய்தியாளர் சீமொ ஹாஷ் கூறினார். இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மாவோ நிங் 10ஆம் நாள் கூறுகையில், அமெரிக்கா உலகத்துக்குப் பொறுப்பான பதிலை அளிக்க வேண்டும் என்றார்.
2022ம் ஆண்டில் சாதகமற்ற வெளிப்புறப் பாதிப்புகளைச் சமாளித்த சீனா, வெளிநாடுகளில் நேரடி முதலீடு செய்த தொகை 98 ஆயிரத்து 537 கோடி யுவானை எட்டி, 2021ஐ விட 5.2 விழுக்காடு அதிகரித்தது.
சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளரும் அரசுத் தலைவருமான ஷி ச்சின்பிங் மத்திய ஆப்பிரிக்காவுக்கு உதவி அளித்து வரும் சீனாவின் 19ஆவது தொகுதி மருத்துவ அணி உறுப்பினர்களுக்கு 9ஆம் நாள் பதில் கடிதம் அனுப்பி, அவர்களுக்கும் வெளிநாடுகளில் மருத்துவப் பணி செய்து வரும் மருத்துவ அணிகளின் உறுப்பினர்களுக்கும் வணக்கம் தெரிவித்து தன் எதிர்பார்ப்பைப் பகிர்ந்து கொண்டார்.
சிரியாவின் எல்லைக்கு அருகிலுள்ள துருக்கியின் தென்பகுதியில் கடுமையான நிலநடுக்கம் நடந்ததை அடுத்து, சீனச் செஞ்சிலுவை சங்கம், சிரியாவுக்கு வழங்கிய முதல் தொகுதி உதவி பொருட்கள் 9ஆம் நாள் அந்நாட்டின் தலைநகர் தமாஸ்கஸ்ஸினைச் சென்றடைந்தது.
உயர்நிலையிலான வெளிநாட்டுத் திறப்பு அளவை, சீனா தொடர்ந்து உறுதியாக முன்னெடுக்கும் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மௌ நிங் அம்மையார் 9ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
இந்தியாவில் வணிக ரீதியிலான வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதமான, ரெபோ ரேட்டை மத்திய ரிசர்வ் வங்கி புதன்கிழைமை 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்துவதாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து ரெபோ விகிதம் 6.5 விழுக்காட்டை எட்டியுள்ளது.
இலங்கை 2026ஆம் ஆண்டுக்குள் திவால் நிலையிலிருந்து மீட்சி அடைந்து விடும் என்று நம்பிக்கை கொண்டுள்ளதாக அந்நாட்டு அரசுத் தலைவர் ரணில் விக்ரமசிங்கே புதன்கிழமை தெரிவித்தார்.
சீனப் பெருநிலப்பகுதியின் பங்கு சந்தை மற்றும் ஹாங்காங் பங்கு சந்தையில் ஜனவரி 25ஆம் நாள் வரை கடந்த 4 வாரங்களில், வெளிநாட்டு நிதி மேலாளர்கள், முறையே 139 கோடி மற்றும் 216 கோடி அமெரிக்க டாலர் முதலீடு செய்துள்ளனர் என்று EPFR ஆய்வு நிறுவனம் அண்மையில் தெரிவித்தது.
அமெரிக்க அரசுத் தலைவர் பைடன், நாட்டின் நிலைமை பற்றிய செய்தியில் தெரிவிக்கப்பட்ட சீனா பற்றிய கருத்துக்கள் குறித்து 8ஆம் நாள் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மாவோ நிங் கூறுகையில், போட்டியைச் சீனா தவிர்க்கவோ அஞ்சவோ இல்லை. ஆனால் போட்டியின் மூலம் முழு சீன-அமெரிக்க உறவையும் வரையறுப்பதை எதிர்க்கிறோம் என்றார்.
அதானி குழுமத்தில் அரசுசார் இந்தியக் காப்பீட்டு நிறுவனத்தின் பங்கு வெறும் 1 விழுக்காடு மட்டுமே என்று நிதித்துறையின் இணை அமைச்சர் பாகவத் காரத் மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
காலநிலை மாற்ற நடவடிக்கைகள் மற்றும் பசுமை வளர்ச்சி ஆகியவற்றை முன்னேற்றும் விதம் உலகளாவிய பசுமை வளர்ச்சி அமைப்புடன் இலங்கை ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக அரசுத் தலைவரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அமெரிக்க வணிக அமைச்சகம் 7ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, 2022ஆம் ஆண்டில் அமெரிக்காவின் சரக்கு மற்றும் சேவை வர்த்தக பற்றாக்குறை 2021ஆம் ஆண்டை விட 12.2 விழுக்காடு அதிகரித்து, 94 ஆயிரத்து 810 கோடி அமெரிக்க டாலரை எட்டி, வரலாற்றில் புதிய பதிவை உருவாக்கியுள்ளது.
சீனத் தலைமை அமைச்சர் லீ கெச்சியாங் பிப்ரவரி 6ஆம் நாள், அரசுப் பணியறிக்கையின் வரைவு பற்றி பல்வேறு துறையினர்கள் மற்றும் அடிமட்ட பிரதிநிதிகளின் கருத்துக்களைக் கேட்டறிந்தார்.
துருக்கிக்கு 4 கோடி யுவான் மதிப்பிலான அவசர உதவிகளையும் அவசரமாக தேவைப்படும் நிவாரணப் பொருட்களையும் சீன அரசு வழங்கவுள்ளது என்று 7ஆம் நாள் சீனச் சர்வதேச வளர்ச்சி ஒத்துழைப்பு நிறுவன அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
ஈராக் தலைவர்கள் பிப்ரவரி 6ஆம் நாள் அந்நாட்டு தலைநகர் பாக்தாதில் ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவைச் சந்தித்தனர். பொருளாதாரம், பாதுகாப்பு முதலிய துறைகளில் இரு நாடுகளின் ஒத்துழைப்பை முன்னேற்றும் என்று இரு தரப்பும் தெரிவித்துள்ளன.
இந்தியாவின் எரிசக்தி துறையில் முதலீட்டு வாய்ப்புகளை ஆராயுமாறு, உலக முதலீட்டாளர்களுக்கு இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடி வலியுறுத்தியதாக, திங்கள்கிழமை தலைமை அமைச்சர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் நெருக்கடியுடன் தொடர்புடைய பல்வேறு தரப்புகள், பொது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அமைதியை முன்னேற்றுவதற்குப் பங்காற்றவும், மோதலில் ஈடுபட்டுள்ள தரப்புகளை மீண்டும் பேச்சுவார்த்தையை நடத்தச் செய்து கூடிய விரைவில் போர் நிறுத்தத்தை நனவாக்குவதற்குப் பாடுபடவும் வேண்டும் என்று சீனா மீண்டும் வேண்டுகோள் விடுப்பதாக ஐ.நாவுக்கான சீன துணை நிரந்தர பிரதிநிதி தை பிங் 6ஆம் நாள் கூறினார்.
பாகிஸ்தான் முன்னாள் அரசுத் தலைவர் முஷாரஃப் மறைவுக்கு சீனாவின் ஆழ்ந்த இரங்கலையும், அவரது குடும்பத்தினர்களுக்கு ஆறுதலையும் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மௌ நிங் 6ஆம் நாள் தெரிவித்தார்.
சிரிய எல்லைக்கு அருகிலுள்ள துருக்கிப் பகுதியில் 6ஆம் நாள் விடியற்காலை நிகழ்ந்த ரிக்டர் அளவு கோலில் 7.8ஆக பதிவான கடும் நிலநடுக்கத்தில் 284 பேர் உயிரிழந்தனர், 2300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தமிழகத்தின் திருப்பத்தூர் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இலவச புடவை வழங்கும் நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்தனர், காயமடைந்த 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவின் மக்கள் பயன்பாட்டுக்கான ஆளில்லா வான்கப்பலை அமெரிக்க ராணுவம் தாக்கியுள்ளதற்கு சீன வெளியுறவு அமைச்சகம் கடும் மனநிறைவின்மையையும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளது.
பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வெற்றிகரமாக நடத்தப்பட்ட முதல் ஆண்டு நிறைவையொட்டி பிப்ரவரி முதல் மார்ச் வரையில் ஹெபே மாநிலத்துடன் இணைந்து பெய்ஜிங் மாநகரம் பல்வேறு நடவடிக்கைகளை நடத்தத் திட்டமிட்டுள்ளது.
அதானி நிறுவனத்தின் பங்கு வெளியீட்டு நடவடிக்கை திரும்ப பெறப்பட்டுள்ளதால் உலக நிதிச் சந்தையில் இந்தியாவின் தகுநிலைக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்ற கூற்றை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை மறுத்தார்.
ரஷியா மீது மேலை நாடுகள் விதித்துள்ள தடை நடவடிக்கைகள், எரியாற்றல் விநியோகப் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் என்று சௌதி அரேபிய எரியாற்றல் துறை அமைச்சர் அப்துல் அசிஸ் பின் சால்மன் பிப்ரவரி 4ஆம் நாள் ரியாத்தில் எச்சரிக்கை விடுத்தார்.
2022ஆம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக சீனாவின் மென்ரகத் தொழிற்துறை பொருளாதாரம் தொடர்ந்து மீட்சி அடைந்துள்ளது. ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கு அதிகமான வருமானமுடைய மென்ரகத் தொழில் நிறுவனங்கள்,1 இலட்சத்து 53 ஆயிரம் கோடி யுவான் லாபத்தை நனவாக்கியுள்ளன. இது, கடந்த ஆண்டை விட, 8.2 விழுக்காடு அதிகமாகும்.
14ஆவது தேசிய மக்கள் பேரவையின் முதலாவது கூட்டத்தில் பரிசீலனைக்காக ஒப்படைக்கப்படும் அரசு பணியறிக்கை பற்றி விவாதிக்கும் விதம், சீனத் தலைமை அமைச்சர் லீக்கெச்சியாங், பிப்ரவரி 3ஆம் நாள் அரசவையின் 8ஆவது முழு அமர்வுக்குத் தலைமை தாங்கினார்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் வெளிவிவகார கமிட்டி அலுவலகத்தின் தலைவருமான வாங் யீ அழைப்பின் பேரில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனுடன் பிப்ரவரி 3ஆம் நாளிரவு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார்.
இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளில் 3 கோடி விவசாயிகளுக்கு மானியத் தொகையாக 2,728 கோடி டாலர் வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய வேளாண் மற்றும் விவாசயிகள் நலவாழ்வுத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
கடந்த நவம்பர் திங்களில், மத சுதந்திர மீறல் காரணமாக பத்துக்கு மேலான நாடுகளை அமெரிக்கா சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டிய நாடுகளின் பட்டியலில் சேரித்துள்ளதாக தெரிவித்ததோடு உய்கூர் இன முஸ்லிம்கள் மீது சீனா தொடர்ச்சியான இன அழிப்பு நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஒரு மாநாட்டில் பழி கூற்றினார்.
2022ஆம் ஆண்டு உக்ரைனின் பொருளாதாரம் 30விழுக்காட்டுக்கும் மேல் சரிவடைந்து, பணவீக்க விகிதம் 26விழுக்காட்டுக்கும் மேல் அதிகரித்துள்ளதாக உக்ரைன் தலைமை அமைச்சர் தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், இலங்கைக்கு 1 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக அந்நாட்டின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ புதன்கிழமை தெரிவித்தார்.
எப்போது எங்கே பயணம் மேற்கொள்ளலாம் என்பது பற்றி தனக்குச் சொல்லும் உரிமை சீனாவுக்கு இல்லை என்று அமெரிக்க பிரதிநிதிகள் அவையின் தலைவர் மெக்கார்த்தி அண்மையில் தெரிவித்தார்.
சீன வணிக அமைச்சகமும், ஹைநான் மாநில அரசும் கூட்டாக நடத்தும் 3ஆவது சீன சர்வதேச நுகர்வு பொருட்காட்சி, ஏப்ரல் 11 முதல் 15ஆம் நாள் வரை ஹைநான் மாநிலத்தின் ஹைக்கோ நகரில் நடைபெறவுள்ளது.
சீனத் தொழில் நிறுவனங்களின் மீதான நியாயமற்ற அடக்குமுறையை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ் நிங் வலியுறுத்தினார்.
பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் முதல் ஆண்டு நிறைவை முன்னிட்டு, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தனது இணையதளத்தின் முகப்பில் வாழ்த்துக் கட்டுரையை வெளியிட்டது.
அமெரிக்காவின் வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் அதிகரித்து இலக்கு வரம்பை 4.5 சதவீதத்திலிருந்து 4.75சதவீதமாக உயர்த்துவதாக அமெரிக்க பெடரல் ரிசர்வ் குழு அறிவித்தது.
நேட்டோ அமைப்பில் பின்லாந்து இணைவது குறித்து துருக்கி ஆக்கப்பூர்வ மனப்பான்மையைக் கொண்டுள்ளதாகவும், இம்மனப்பாங்கு ஸ்வீடன் நேட்டோவில் சேர்வது தொடர்பில் இல்லை என்று துருக்கி அரசுத் தலைவர் எர்டோகன் பிப்ரவரி முதல் நாள் தெரிவித்தார்.
வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவிலான 2023-2024ஆம் ஆண்டுக்கான நிதி ஆண்டில் இந்தியாவின் வரவு செலவு திட்டத்தை உள்ளூர் நேரப்படி பிப்ரவரி முதல் நாள் இந்தியா அறிவித்தது.
2022ஆம் ஆண்டிற்கான, இலங்கையின் மொத்த இறக்குமதி செலவினம் சுமார் 1,830 கோடி அமெரிக்க டாலராகும். இது 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 11.4 விழுக்காடு குறைந்துள்ளது என்று இலங்கையின் மத்திய வங்கி வெளியிட்ட சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.
பிரிட்டனின் செய்தி ஊடகங்கள் வெளியிட்ட செய்தியின் படி, உயரும் எரிசக்தி விலைகள், அதிக பணவீக்கம் ஆகியவை காரணமாக, பிப்ரவரி முதல் நாள், ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள், தொடர்வண்டி ஓட்டுநர்கள் முதலிய சுமார் 5 இலட்சம் பேர் அந்நாட்டில் வேலைநிறுத்தங்களை மேற்கொண்டுள்ளனர்.
அமெரிக்கா, தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் தேசிய ஆற்றலைத் தவறாகப் பயன்படுத்தி, கோட்பாடு மற்றும் நியாயமற்ற முறையில் சீன தொழில் நிறுவனங்களை அடக்குவதைச் சீனா உறுதியாக எதிர்க்கின்றது
ஹாங்கேரி-சீன மொழி பள்ளியின் மாணவர்களுக்கு சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் அண்மையில் பதில் கடிதம் அனுப்பினார். ஹாங்கேரி இளைஞர்கள், சீனாவை மேலும் அறிந்து கொண்டு, சீன-ஹாங்கேரி நட்புறவு இலட்சியத்தை முன்னேற்றுவதற்கு பங்காற்ற வேண்டும் என்று இக்கடிதத்தில் ஷி ச்சின்பிங் ஊக்கமளித்தார்.
ஜனவரியில் சீன தயாரிப்புத் தொழிலின் கொள்முதல் மேலாளர் குறியீடு 50.1 வழுக்காட்டை எட்டி, 3.1 புள்ளிகள் அதிகரிப்புடன், மாறுநிலை புள்ளிக்கு மேலாக உயர்ந்தது.
ஏப்ரல் 2023 முதல் மார்ச் 2024 வரையிலான நிதியாண்டில், இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம் 6.1 சதவீதமாகவும், அதற்கு அடுத்த நிதியாண்டில் 6.8 சதவீதமாகவும் இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் செவ்வாயன்று கணித்துள்ளது.
022ஆம் ஆண்டில் சீனத் தொழிற்துறை பொருளாதாரம் பொதுவாக சீரான நிலையில் இயங்கியதோடு, தொழிற்துறை உற்பத்தி மற்றும் விற்பனை தொடர்ச்சியான வளர்ச்சியைக் கண்டுள்ளது.
நேட்டோவில் சேருவது பற்றிய ஸ்வீடன் மற்றும் பின்லாந்தின் விண்ணப்பங்களைத் துருக்கி வேறுபடுத்திப் பார்க்கக் கூடும் என்று துருக்கியின் வெளியுறவு அமைச்சர் கவூசொக்லூ ஜனவரி 30ம் நாள் தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டு உலகப் பொருளாதார வளர்ச்சி 2.9 சதவீதமாக இருக்கும். 2024ஆம் ஆண்டு அதன் வளர்ச்சி 3.1சதவீதமாக உயரும் என்று சர்வதேச நாணயம் நிதியமான ஐ.எம்.ஃஎப் மதிப்பீடு செய்துள்ளது.
கோவிட்-19 பெருந்தொற்று ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தக்கூடும் என்றாலும், சர்வதேச அக்கறையின் படி அது இன்னும் பொதுச் சுகாதார அவசரநிலையாக உள்ளதாக உலகச் சுகாதார அமைப்பு 30ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் பொது மக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் படி, 70 விழுக்காட்டுக்கும் அதிகமான அமெரிக்க மக்களுக்கு அமெரிக்காவின் எதிர்கால பொருளாதார வளர்ச்சியில் நம்பிக்கை இல்லை எனத் தெரியவந்துள்ளது.
பசுமை வளர்ச்சி உள்ளிட்ட துறைகளுக்கான ஆதரவுகளை அதிகரிக்க நிதி நிறுவனங்களுக்கு வழிகாட்டும் விதம், நாணயக் கொள்கை சார் 3 கருவிகள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும்.
சீனத் தலைமையமைச்சர் லீ கெச்சியாங் ஜனவரி 28ஆம் நாள் சீன அரசவையின் வழமை கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார். தற்போதைய பொருளாதாரச் சமூக வளர்ச்சிப் பணியைத் தொடர்ந்து இறுகப்பற்றி, ஆண்டின் தொடக்கத்தில் பொருளாதாரச் செயல்பாட்டின் சீரான மீட்சியை முன்னேற்ற வேண்டும்.
உள்ளூர் செய்தி ஊடகம் வெளியிட்ட செய்தியின் படி, இலங்கை அரசுத் தலைவர் ரணில் விக்கரமசிங்க சிறப்பு ஆணையில் கையெழுத்தி, உள்ளூர் நேரப்படி ஜனவரி 27ஆம் நாள் நள்ளிரவில் இருந்து பிப்ரவரி 8ஆம் நாள் வரை தேசிய நாடாளுமன்றம் முடக்கப்படுவதாக அறிவித்தார்.
இணைய உலகில் பாதுகாப்பு வேலியைக் கட்டியமைத்து, பகைமைக் கூற்று, தீவிரவாத சிந்தனை, பொய்யான தகவல்கள் ஆகியவற்றின் பரவலைத் தடுக்க வேண்டும் என்று குட்ரேஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் மெம்பிஸ் நகராட்சி ஜனவரி 27ஆம் நாளிரவு வெளியிட்ட காணொளி ஒன்றில், ஆப்பிரிக்க வம்சாவழியைச் சேர்ந்த ஆண் ஒருவர் காவற்துறையினரால் தாக்கப்பட்டார்.
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, ஜனவரி 20ஆம் நாள் முடிவடைந்த வாரத்தில் 172 கோடி அமெரிக்க டாலர் அதிகரித்து, 57,372 கோடி அமெரிக்க டாலராக உள்ளது என்று இந்திய மத்திய வங்கி வெள்ளிக்கிழமை வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.
சீனப் பண்பாட்டு மற்றும் சுற்றுலா அமைச்சகம் 27ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, இவ்வாண்டின் வசந்த விழா காலத்தில் 30.8 கோடி உள்நாட்டுப் பயணிகள் சுற்றுலா பயணம் மேற்கொண்டனர்.
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தொடர்வண்டி பெட்டிகள் பாகிஸ்தானின் அதிவிரைவு இருப்புப்பாதை சேவையில் அதிகாரப்பூர்வமாகச் சேருவதாக அந்நாட்டின் இருப்புப்பாதை நிறுவனம் 27ஆம் நாள் அறிவித்தது.
2022ஆம் ஆண்டின் 4வது காலாண்டில் அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 2.9 விழுக்காடு அதிகரித்துள்ளது. 2022ஆம் ஆண்டு முழுவதும் அந்நாட்டுப் பொருளாதாரம் 2.1 விழுக்காடு வளர்ச்சி அடைந்துள்ளது
பிரிட்டனின் உள்நாட்டில் 2022ஆம் ஆண்டு மொத்தம் 7லட்சத்து 75ஆயிரம் வாகனங்கள் புதிதாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் 26ஆம் நாள் வியாழக்கிழமை தெரிவித்தது.
சீன ஊடகக் குழுமத்தின் 2023 வசந்த விழா கலை நிகழ்ச்சி உள்நாடு மற்றும் வெளிநாட்டுப் பார்வையாளர்களுக்குக் கோலாகலமான சீனப் புத்தாண்டின் பண்பாட்டு விருந்து அளித்தது.
மகிழ்ச்சியான வசந்த விழா எனும் கொண்டாட்ட நிகழ்ச்சிகள், ஸ்பெயின், செர்பியா, ஹங்கேரி, மெக்சிகோ, மியன்மார், பிரேசில் உள்ளிட்ட பல நாடுகளில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டன.
உலகளாவிய கருத்துக் கணிப்பில் கடந்த 3 ஆண்டுகளில் கோவிட்-19க்கு எதிராக போராடுவதில் சீனா பெற்றுள்ள முன்னேற்றத்துக்கு 88.1 விழுக்காட்டினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஈரான் மற்றும் ரஷியா மீது அமெரிக்காவின் தடை நடவடிக்கைகளைச் சமாளிக்கும் விதமாக, ஈரானுக்கும் ரஷியாவுக்கும் இடையே ஒத்துழைப்பை வலுப்டுத்த வேண்டும் என்று ஈரான் நாடாளுமன்ற தலைவர் கலிபாஃப் 23ஆம் நாள் தெரிவித்தார்.
சீனச் சந்தை, கிரேக்கத்தின் சுற்றுலாத் துறைக்கு மிகவும் முக்கியமானது. மீண்டும் வருகை தரும் சீன சுற்றுலா பயணிகள், உள்ளூர் சுற்றுலாத் துறைக்கு ஆக்கப்பூர்வமான பயன்களைக் கொண்டு வரும்
சீனாவில் வசந்த விழாவுக்கான போக்குவரத்து இயக்கத்தின் முதல் 15 நாட்களான ஜனவரி 7 முதல் 21ஆம் நாள் வரை சீனா முழுவதும் சுமார் 11கோடி பயணிகள் தொடர்வண்டி மூலம் பயணம் செய்துள்ளனர்.
ஜனவரி 22ஆம் நாள் அதிகாலை 2 மணி வரை, பல்வேறு ஊடகங்களிலும் 2023ஆம் ஆண்டுக்கான வசந்த விழா கலை நிகழ்ச்சியின் மொத்த பார்வைகள் எண்ணிக்கை 1101 கோடியைத் தாண்டியது.
இந்தியாவின் தேசிய தலைநகர் மண்டலத்தில் செயல்படும் நிலக்கரி நிறுவனங்களுக்கு, நிலக்கரி ஒதுக்கீட்டை முற்றிலும் நிறுத்த வேண்டுமென இந்திய நிலக்கரி நிறுவனம் மற்றும் ஹரியானா மற்றும் உத்தரபிரதேச உள்ளூர் அரசாங்கங்களை இந்திய காற்று தர மேலாண்மை ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியும், அரசவையும், 20ஆம் நாள் முற்பகல், மக்கள் மாமண்டபத்தில் 2023ஆம் ஆண்டு வசந்த விழாவுக்கான விருந்து ஒன்றை நடத்தியது.
அமெரிக்காவின் பணவீக்கக் குறைப்புச் சட்டத்தில் இடம்பெற்ற பாகுபாட்டுத்தன்மை வாய்ந்த வர்த்தகப் பாதுகாப்பு விதிகள் அதன் கூட்டாளி நாடுகள் உள்ளிட்ட பல தரப்புகளின் எதிர்ப்பு மற்றும் விமர்சனத்துக்கு உள்ளாகியருக்கின்றன.
2025ஆம் ஆண்டின் இறுதிக்குள் நாடளவில் சாலை விபத்துகளை 50 விழுக்காடு குறைப்பதற்கு அனைவரின் முயற்சிகளும் அவசியம் என்று இந்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் கூறினார்.
வசந்த விழாவை முன்னிட்டு, சீன மக்களுக்குப் சீன மொழியில் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை ஐ.நா தலைமைச் செயலாளர் ஆன்டோனியோ குட்ரெஸ் 18ஆம் நாள் காணொளி வழியில் தெரிவித்தார்.
சீன துணை தலைமை அமைச்சரும் சீன-அமெரிக்க பன்முக பொருளாதார பேச்சுவார்த்தைக்கான சீன தரப்பு பொறுப்பாளருமான லியு ஹே, அமெரிக்க நிதி அமைச்சர் யேலன் அம்மையாருடன் 18ஆம் நாள் பேச்சுவார்த்தை நடத்தினார்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் வெளிநாட்டுத் தொடர்புத் துறை துணை அமைச்சர் ச்சேன் ச்சோ தலைமையில், சீனப் பிரதிநிதி குழு ஜனவரி 14ஆம் நாள் முதல் 18ஆம் நாள் வரை இலங்கையில் பயணம் மேற்கொண்டுள்ளது.
2022ஆம் ஆண்டு சீனத் தேசிய பொருளாதாரம் குறித்த தரவுகளைச் சீனத் தேசியப் புள்ளிவிபரப் பணியகம் அண்மையில் வெளியிட்டது. புதிய ஆண்டில் சீனப் பொருளாதாரம் ஒட்டுமொத்த முன்னேற்றத்தைப் பெறுவது உறுதி. இது உலகப் பொருளாதாரத்திற்கு மேலதிகப் பங்காற்றும் என்று நம்புவதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் வாங் வென்பின் 18ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
கடந்த ஆண்டு அமெரிக்கா நிறைவேற்றிய பணவீக்கக் குறைப்பு சட்டம் உள்ளூர் தொழில்களுக்கு அதிக உதவித்தொகை வழங்குவதை உள்ளடக்கியது. இச்சட்டம், வலுவான ஒருதரப்புவாதம் மற்றும் பாதுகாப்புவாதத்தன்மை வாய்ந்தது. இதற்கு எதிராக உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்று ஐரோப்பிய ஒன்றியம் 17ஆம் நாள் தெரிவித்தது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் பிப்ரவரியில் சீனாவில் பயணம் மேற்கொள்வது குறித்து சீனாவும் அமெரிக்காவும் விவாதித்து வருகின்றன என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் வாங் வென்பின் 17ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
இவ்வாண்டு ஜனவரி 16ஆம் நாள் மார்ட்டின் லூதர் கிங் தினத்தையொட்டி, இனவெறி பாகுபாட்டை எதிர்த்து, அமைதி மற்றும் நீதிக்கு ஆதரவு அளிக்கும் வகையில், ஆர்ப்பாட்டம், குடியிருப்புப் பகுதிகளின் சமூக பொது சேவை முதலிய பல்வேறு நடவடிக்கைகள் கடந்த சில நாட்களில் அமெரிக்காவில் நடைபெற்று வருகின்றன.
சீன அரசவையின் தகவல் தொடர்பு பணியகம் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில், 2022ஆம் ஆண்டு சீனத் தேசிய பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த நிலைமை அறிமுகம் செய்யப்பட்டது.
இலங்கையில் 10 கிலோ அரிசியை திங்களுக்கு ஒரு முறை, குறைந்த வருமானம் கொண்ட 20 லட்சம் குடும்பங்களுக்கு இரண்டு மாதங்களுக்கு வழங்கும் என இலங்கை அரசுத்தலைவரின் ஊடகப் பிரிவு திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இலங்கை அரசு, சொந்த முயற்சி மூலம், அன்னிய கூட்டாளிகளின் உரிமையையும், உள்நாட்டின் முதலீட்டுச் சூழலையும், செல்வாக்கையும் பேணிக்காக்க முடியும் என்று சீனா நம்புகிறது.
ஜனவரி 16ஆம் நாள் கடலின் பனிக்கட்டிகளை உடைக்கும் திறனைக் கொண்ட சீனாவின் முதலாவது பெரிய ஹைக்சுன் 156 கப்பல் அதிகாரப்பூர்வமாக தியான்ஜினில் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்பட்டது.
உலகப் பொருளாதார ஒருமைப்பாடு பல பத்து ஆண்டுகளுக்குப் பின், தற்போது துண்டாகியுள்ள நிலையில் உலகப் பொருளாதாரத்தின் மொத்த உற்பத்தி மிதப்பு 7விழுக்காடு வரை குறைய நேரிடும்
சீனாவின் தையுவான் செயற்கைக் கோள் ஏவு மையத்திலிருந்து, லாங்மார்ச்—2டி ஏவூர்தி மூலம், சிலு-2/3 செயற்கைக்கோள், லுயோ ஜியா-3 01 செயற்கைக்கோள், ஜிலின்-1 03 டி 34 செயற்கைக்கோள் முதலிய 14 செயற்கைக்கோள்கள் 2023ஆம் ஆண்டின் ஜனவரி 15ஆம் நாள் 11:14 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டன.
2022 ஆம் ஆண்டு டிசம்பர் திங்களில், வெளிநாடுகளில் வேலை செய்யும் இலங்கை தொழிலாளர்கள் நாட்டிற்கு 47.56 கோடி அமெரிக்கா டாலர்களை அனுப்பியுள்ளனர் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மனுஷ நாணயக்கார சனிக்கிழமை தெரிவித்தார்.
ஜனவரி 8ஆம் நாள் முதல் 11ஆம் நாள் வரை, உலக முஸ்லிம் சங்கச் செயற்குழுவின் தலைவர் ஆலி, உலகளவில் புகழ் பெற்ற இஸ்லாமிய மதவாதிகள் மற்றும் அறிஞர்கள் குழுவுக்குத் தலைமை தாங்கி, சீனாவின் சின்ச்சியாங் உய்கூர் தன்னாட்சி பிரதேசத்தில் பயணம் மேற்கொண்டார்.
கடல் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு முதலீடுகளுக்கான சட்ட கட்டமைப்பை இறுதி செய்யும் அரசிதழில் கையெழுத்திட்டுள்ளதாக இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
காத்மாண்டுவில் உள்ள அரசுத் தலைவர் மாளிகையில் நேபாளத்திற்கான சீனாவின் புதிய தூதர் சென் சாங் சமார்ப்பித்த அதிகாரப் பத்திரத்தை 13ஆம் நாள் நேபாள அரசுத் தலைவர் பித்யா தேவி பண்டாரி அம்மையார் ஏற்றுக்கொண்டார்.
ஜப்பான் ஒலிபரப்பு நிறுவனமான என்.எச்.கே. 13ஆம் நாள் வெளியிட்ட செய்தியின் படி, இவ்வாண்டின் வசந்த மற்றும் கோடைக்காலங்களில் ஃபுகுஷிமாகென் முதலாவது அணு மின் நிலையத்தின் அணுக்கழிவு நீரை கடலுக்குள் விட ஜப்பானிய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
சீனாவின் சிச்சாங் செயற்கைக் கோள் ஏவு மையத்திலிருந்து, லாங்மார்ச்--2சி ஏவூர்தி மூலம், ஆப்ஸ்டார்--6இ செயற்கைக்கோள் 2023ஆம் ஆண்டின் ஜனவரி 13ஆம் நாள் 2:10 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மையப் பகுதியில் 11ஆம் நாள் நடத்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில், குறைந்தபட்சம் 5 பேர் உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்தனர்.
பல்வேறு துறைகளுடன் இணைந்து, சீனர்கள் மற்றும் வெளிநாட்டு பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்கு சீரான சூழ்நிலையை உருவாக்கி, சர்வதேச சுற்றுலாத் துறைக்கும் உலக பொருளாதார மீட்சிக்கும் பங்காற்ற சீனா விரும்புகிறது
சீனத் தேசியப் புள்ளிவிவரப் பணியகம் 12ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, 2022ஆம் ஆண்டில் தேசிய நுகர்வோர் விலைக் குறியீடு, முந்தைய ஆண்டில் இருந்ததை விட 2 விழுக்காடு அதிகரித்தது.
தகவல் பரிமாற்ற கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அமெரிக்காவின் உள்நாட்டு விமான சேவைகள் தற்காலிகமாக முடங்குவதாக என்று ஃபெடரல் விமான போக்குவரத்து நிர்வாகம் 11ஆம் நாள் அறிவித்துள்ளது.
விமானம், விண்வெளி, கப்பல், தண்டவாளம், வாகனம், மின்சாரம் முதலிய உயர் தொழில்நுட்ப சாதனங்களின் தயாரிப்புத் துறை, ஒரு நாட்டின் தொழில்துறை உற்பத்தித் திறன் மற்றும் புத்தாக்கத் திறனை எடுத்துக்காட்டுகிறது.
சீன வெளியுறவு அமைச்சர் சின் கங் 11ஆம் நாள் ஆப்பிரிக்க ஒன்றியத்தின் ஆணையத் தலைவருடன் 8ஆவது சீன-ஆப்பிரிக்க ஒன்றிய நெடுநோக்கு பேச்சுவார்த்தையை நடத்தினார்.
முதலீட்டாளர்களை ஈர்க்கும் விதம், இலங்கையின் தெற்குக் கடற்கரையில் அமைந்துள்ள மட்டாலா சர்வதேச விமான நிலையத்தை பல்நோக்கு வணிக மையமாக மாற்றுவதற்கு அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மெக்சிகோ தலைநகர் மெக்சிகோ நகரில் 10ஆம் நாள் நடைபெற்ற 10ஆவது வட அமெரிக்க உச்சி மாநாட்டில் அமெரிக்க அரசுத் தலைவர் பைடன், மெக்சிகோ அரசுத் தலைவர் லோபெசி, கனடா அரசுத் தலைவர் ட்ருதோ ஆகியோர் கலந்து கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர்.
2023ஆம் ஆண்டில் சீனாவில் நிறைய புதிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கொவைட்-19 நோய் தொற்று கட்டுப்பாட்டு கொள்கை சரிப்படுத்தப்பட்ட பிறகு, உற்பத்தியும் வாழ்க்கையும் இயல்பான நிலைக்குத் திரும்பி வருகின்றன.
குறிப்பிட்ட சில நாடுகள் சீனா மீது பாகுபாடுடைய தடை நடவடிக்கையை மேற்கொள்கின்றன. இதற்கு சீனா உறுதியான எதிர்ப்பு தெரிவிப்பதோடு, பதில் நடவடிக்கையையும் மேற்கொள்ளும்.
சீன வெளியுறவு அமைச்சர் சின் கங் ஆப்பிரிக்க பயணத்தின் இடையே வங்கதேசத்தின் விமான நிலையத்தில், அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் மோமன்னுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடன், புதிதாக பிரேசில் அரசுத் தலைவராகப் பதவி ஏற்றுள்ள லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவும் தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட பின் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டதாக அமெரிக்க வெள்ளை மாளிகை 9ஆம் நாள் தெரிவித்தது.
2022ஆம் ஆண்டின் முதல் 6 திங்கள் காலத்தில் சீனாவில் புதிய எரிசக்தி வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனை, முறையே 26 இலட்சத்து 61 ஆயிரம் மற்றும் 26 இலட்சம் ஆகும். இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 1.2 மடங்கு அதிகமாகும்.
அமெரிக்கா தனது உள்நாட்டு நோய் தொற்று தகவல்கள் மற்றும் தரவுகளை உரிய நேரத்திலும் வெளிப்படையாகவும் உலக சுகாதார அமைப்பு மற்றும் சர்வதேச சமூகத்துடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
ஜனவரி 9ஆம் நாள் காலை சீனாவின் வென்ச்சாங் விண்வெளி ஏவு மையத்திலிருந்து லாங்மார்ச்-7 ஏவூர்தி மூலம் ஷிஜியன்-23 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டு, திட்டமிட்ட சுற்று வட்ட பாதையில் நுழைந்தது.
தற்போது சீனாவின் 98.7 விழுக்காடு வட்டங்களிலுள்ள மருத்துவ நிலையங்களிலும், குடியிருப்பு மருத்துவ சேவை மையங்களிலும் காய்ச்சல் ஆலோசனை அறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
புதிய ரக கரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் 10ஆவது பதிப்பை சீன அரசவையின் கூட்டு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு இயங்குமுறை ஜனவரி 7ஆம் நாள் வெளியிட்டது.
சீன தரப்பு வைரஸ் மரபணு வரிசை பற்றிய தரவுகளை தொடர்ச்சியாக பதிவேற்றம் செய்து வருகிறது. கடந்த சில வாரங்களில், தொற்று நோய் தகவல்களின் பகிர்வை சீனா அதிகரித்துள்ளது என்றும் உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது
ஜனவரி 5ஆம் நாள் 39ஆவது சீன ஹார்பின் சர்வதேசப் பனி விழாவின் தொடக்க நிகழ்வு ஹார்பின் நகரில் நடைபெற்றது. இக்காலத்தில் பனியின் அழகையும் உயிர்ச்சக்தியையும் பல பனி சார்ந்த நடவடிக்கைகள் வெளிப்படுத்தின.
புத்தாண்டு காலத்தில் சீனாவின் பல்வேறு துறைகளின் மீட்சியடைந்து வளர்ந்து வருகின்றது. கடந்த 3 ஆண்டுகளாக சீனா உலகின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய இயக்கு ஆற்றலாக இருந்து வருகிறது. 2023ஆம் ஆண்டில் சீனப் பொருளாதாரம் சிறந்த செயல்திறனைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
குளிர்காலத்தில் பல பூக்கள் வாடி விழும் போது பிளம் மலர்கள் மட்டும் பெருமையுடன் நிற்கின்றன. இத்தகைய எழுச்சி, சீனாவின் பாரம்பரியப் பண்பாட்டில் மக்களின் எழுச்சி கண்ணோட்டத்தின் காட்சி மற்றும் நோக்கத்தின் இலக்கை வர்ணிக்கும் போது பயன்படுத்தப்படுகின்றது.
மாஸ்கோ நேரப்படி 6ஆம் நாள் 12 மணி முதல் 7ஆம் நாள் வரை ரஷிய-உக்ரைன் படைப்பிரிவின் தொடர்பு கோட்டுப் பகுதியில் 36 மணிநேர போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்த ரஷிய அரசுத் தலைவர் புதின் 5ஆம் நாள் கட்டளையிட்டார்.
அமெரிக்க நாடாளுமன்றப் பிரதிநிதிகள் அவைத் தலைவருக்கான தேர்தலில் 5ஆம் நாள் பிற்பகல் 10ஆவது சுற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், 200 வாக்குகளைப் பெற்ற குடியரசுக் கட்சித் தலைவர் கெவின் மெக்கார்த்தி, 212 வாக்குகளைப் பெற்ற ஜனநாயக கட்சி உறுப்பினர் ஹக்கீம் ஜெஃப்ரிஸ்விடம் தோல்வியைத் தழுவியதால், பிரதிநிதிகள் அவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் துணைவியார் பெங்லியுவான், 4ஆம் நாள் பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவர் மார்கோஸின் துணைவியார் லிஷாவுடன் 4ஆம் நாள் பிற்பகல் சீனத் தேசிய அருங்காட்சியகத்தில் பயணம் மேற்கொண்டார்.
சர்வதேச விளையாட்டுச் செய்தியாளர்கள் சம்மேளனம் வழங்கிய தகவலின்படி, உலகம் முழுவதிலுள்ள செய்தியாளர்களின் வாக்கெடுப்பு மூலம் 2022ஆம் ஆண்டில் விளையாட்டுப் போட்டிக்கான தலைசிறந்த ஊடக வசதி விருது தேர்ந்தெடுக்கப்பட்டது.
துணி ஓவியம், சீனத் தேசியப் பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வமாகும். முயல் ஆண்டு பிறக்கவிருப்பதை முன்னிட்டு கைவினைஞர்கள் முயல் வடிவிலான கலைப் பொருட்களைத் தயாரித்து வசந்த விழாவை வரவேற்கிறார்கள்.
குளிர்காலத்தில் சீனாவின் பல்வேறு பகுதிகள் அழகிய காட்சிகளாக உருவெடுத்துள்ளன. வடகிழக்குப் பகுதியின் பனி தொடங்கி தெற்குப் பகுதியின் பசுமை வரை ஒரே பருவத்தில் வேறுபட்ட காட்சிகள் தோன்றியுள்ளன.
2023ஆம் ஆண்டின் தொடக்கம் முதலே சீனப் பயணிகள் அதிகம் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். புள்ளிவிவரங்களின் படி, புத்தாண்டு விடுமுறையின் மூன்று நாட்களில் நாடளவில் 5 கோடியே 27 இலட்சத்து 13 ஆயிரத்து 400 பயணிகள் பயணித்துள்ளனர். இதன் 2 ஆயிரத்து 651 கோடியே 70 இலட்சம் யுவான் வருமானம் கிடைத்துள்ளது.
ஜெருசலேம் டன்பெல் மலை பிரதேசத்திலுள்ள அக்சா மசூதியின் நிலைமை குறித்து ஐ.நா பாதுகாப்பவை அவரசக் கூட்டம் நடத்த வேண்டுமென சீனாவும் ஐக்கிய அரபு அமீரகமும் அண்மையில் கோரியுள்ளன. இக்கூட்டம் 5ஆம் நாள் நடத்தப்படும் என்று கருதப்படுகிறது.
இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ராஷ்டிரசந்த் துகடோஜி மகாராஜ் நாக்புர் பல்கலைக்கழகத்தில் 108ஆவது இந்திய அறிவியல் மாநாடு வியாழக்கிழமை தொடங்கியது.
அமெரிக்காவின் 118ஆவது நாடாளுமன்றக் கூட்டம் ஜனவரி 3ஆம் நாள் துவங்கியது. அன்று நடைபெற்ற 3 சுற்று பிரதிநிதிகள் அவை தலைவர் தேர்தலில் யாரும் வெற்றி பெறவில்லை.
இந்தியாவில் டிசம்பர் மாத கணக்கின்படி வேலைவாய்ப்பில்லா விகிதம் 8.3 விழுக்காடாக உயர்ந்துள்ளதை இந்திய பொருளாதார மதிப்பீட்டு மையத்தின் தரவுகள் வெளிக்காட்டியுள்ளன.
குய்ஜோ மாநிலத்தில் புத்தாண்டு விடுமுறையில் நடத்தப்பட்ட சிறப்பான மியோ இன ஆடல் பாடல் நிகழ்ச்சி, மியோ இனப் பூத்தையல், பாரம்பரிய வழக்கங்களின் நிகழ்வு முதலியவை பயணிகளை ஈர்த்துள்ளன. மியோ இனப் பண்பாடு மற்றும் எழில் மிக்க இயற்கை மூலவளங்கள் மூலம், சிறுப்பான்மை தேசிய இன ஊர்கள், தனிச்சினப்பான சுற்றுலா வளர்ச்சி பாதையில் நடைபோட்டு வருகின்றன.
2023ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாள், சீன ஊடகக் குழுமத்தின் இயக்குநர் ஷேன் ஹாய்சியுங், சி.ஜி.டி.என், சீன வானொலி நிலையம் மற்றும் இணையம் வழியாக வெளிநாடுகளில் உள்ள ரசிகர்களுக்குப் புத்தாண்டுரையை நிகழ்த்தினார்.
இவ்வாண்டின் ஜனவரி முதல் நாள் வரை, ஓராண்டாக அமலில் உள்ள ஆர்.சி.யீ.பி எனும் பிராந்திய விரிவான பொருளாதார கூட்டுறவு உடன்படிக்கை, எண்ணற்ற தொழில் நிறுவனங்களுக்கு வணிக வாய்ப்புகளை கொண்டு வந்துள்ளது.
சீன மக்களின் வாழ்க்கை இயல்புக்கு திரும்புவது, பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் ஆகியவற்றில் சுறுசுறுப்பான காட்சிகள் தொடர்பான அம்சங்கள் பல வெளிநாட்டு பத்திரிக்கைகளின் முக்கிய பக்கங்களில் இடம்பெற்றன.
13ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் 38ஆவது கூட்டமும், சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 13 ஆவது தேசிய கமிட்டிக் கூட்டமும் சமீபத்தில் நடைபெற்றன.
பிராந்திய பன்முகப் பொருளாதார கூட்டுறவு உடன்படிக்கை(ஆர்சிஇபி), கடந்த ஜனவரி முதல் நாள் அமலுக்கு வந்த பிறகு, சீனாவுக்கும் ஆர்சிஇபிவின் இதர உறுப்பு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் வேகமாக வளர்ந்து வருகிறது.
சிஎன்பிசி எனும் அமெரிக்காவின் நுகர்வோர் செய்தி மற்றும் வணிகச் சேனல் 26ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, சீனாவில் கோவிட் 19 நோய் பரவல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கை புதிய கட்டத்தை அடைந்துள்ளது. அமெரிக்க டாலர் மதிப்பு உச்சத்தை எட்டி குறைந்து வருகின்றது.
கரோனா தடுப்பு நடவடிக்கைகளை சீனா சரிப்படுத்துவதற்கான காரணம் நோய் பரவல் கட்டுப்பாட்டுக் கருத்தில் ஏற்பட்ட மாற்றம் தான் என்றும் மக்களின் உயிர் பாதுகாப்பில் சீனா கவனம் செலுத்தவில்லை என்றும் சில மேலை நாடுகளின் ஊடகங்கள் விமர்சித்துள்ளன.
கொசோவோ விவகாரத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்புகளும் இயன்ற அளவில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் 28ஆம் நாள் வேண்டுகோள் விடுத்துள்ளது.
விண்வெளி சுற்றுச்சூழல் கண்காணிப்பு உள்ளிட்ட புதிய தொழில் நுட்பங்களை சுற்றுப்பாதையில் சோதனை செய்யும் விதம் ஷி யன்-10 02 எனும் செயற்கைக்கோளை டிசம்பர் 29ஆம் நாள் 12:43 நிமிடத்தில் சீனா செலுத்தியது.
சீனாவின் யாங் லோங் ஆற்றின் மேல் அமைந்துள்ள கலப்பின நீரேற்றித் தேக்கல் மின் நிலையத்தின் கட்டுமானப் பணி டிசம்பர் 29ஆம் நாள் அதிகாரப்பூர்வமாகத் துவங்கியது.
சீனாவின் நிங்சியா ஹுய் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் யின் ச்சுவான் நகரிலுள்ள ஒளிவோல்ட்டா மின் நிலையங்கள் நீல வண்ண கடல் போன்ற அழகான காட்சியை அளிக்கின்றன.
மேற்கத்திய ஊடகங்கள் சில சீனாவின் தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக் கொள்கை சரிசெய்யப்பட்டது குறித்து விமர்சித்ததுடன், தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் சீனா தோல்வியடைந்து விட்டது என்று கூறின.
2023ஆம் ஆண்டின் ஜனவரி 8ஆம் நாள் முதல் சர்வதேசப் பயணிகள் சீனாவை வந்தடையும் போது, புதிய ரக கரோனாவுக்கான நியூக்ளிக் அமில சோதனையை செய்ய வேண்டியதில்லை என்றும், விமான பயணத்துக்கு முன் 48 மணிநேரத்திற்குள் செய்யப்பட்ட நியூக்ளிக் அமில சோதனை முடிவுகளை சமர்பிக்க வேண்டும் என்று சீனச் சுங்கத் துறை தலைமைப் பணியகம் புதன்கிழமை அறிவித்தது.
உக்ரைன் நெருக்கடிக்கு முடிவு கொண்டு வரும் விதம் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் ஐ.நா “அமைதி உச்சி மாநாட்டை” நடத்த வேண்டுமென உக்ரை அரசு விரும்புவதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்தார். அதேசமயம், இம்மாநாட்டில் ரஷியா பங்கேற்காது என்று எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவிலுள்ள கலிபோர்னிய பல்கலைக்கழகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையின் படி, கடந்த நூற்றாண்டின் 60 மற்றும் 70-களில் சான் பிரான்சிஸ்கோ அருகே உள்ள சிறைச்சாலையில் குறைந்தது 2,600 கைதிகள் மருத்துவ பரிசோதனைகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
2022 ஆய்வு முன்னணி, 2022 ஆய்வு முன்னணியில் சுறுசுறுப்பான துறைகள் மற்றும் தலைமை நாடுகள் ஆகிய 2 அறிக்கைகளை சீன அறிவியல் கழகத்தின் அறிவியல் தொழில் நுட்ப நெடுநோக்கு ஆலோசனை ஆய்வகம் உள்ளிட்ட நிறுவனங்கள் 27ஆம் நாள் கூட்டாக வெளியிட்டன.
சீன சர்வதேச வர்த்தக முன்னேற்றச் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் யாங்ஃபென் 27ஆம் நாள் கூறுகையில், சீனாவிலுள்ள 160 அன்னிய தொழில் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு வணிகச் சங்கங்களிடம் சீன சர்வதேச வர்த்தகச் சங்கம் அண்மையில் மேற்கொண்ட ஆய்வின்படி 2023ஆம் ஆண்டில் சீனப் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என்று 99.4 விழுக்காட்டு நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளன.
பிரிட்டனின் சிந்தனைக் கிடங்கான பொருளாதார மற்றும் வணிக ஆராய்ச்சி மையம் வெளியிட்ட புதிய அறிக்கையின் படி, 2037ஆம் ஆண்டுக்குள், இந்தியா, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இயற்கைப் பேரிடர் காரணமாக, நியூயார்க் மாநிலத்தில் அவசர நிலையை அமல்படுத்துவதற்கு அந்நாட்டு அரசுத் தலைவர் பைடன் டிசம்பர் 26ஆம் நாள் அனுமதியளித்தார். பனி புயல் சீற்றத்தைத் தடுப்பதற்குக் கூட்டாட்சி அரசு உதவி அளிக்க வேண்டும். அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம், கூட்டாட்சி அவசர விவகார நிர்வாகப் பணியகம் ஆகியவை மீட்புப் பணிக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அறிவியல் தொழில் நுட்பத்தையும் சீர்திருத்தத்தையும் பயன்படுத்தி, வேளாண்மை வல்லரசு ஆக்கப்பணியை வலுப்படுத்த வேண்டும் என்று அண்மையில் நிறைவுற்ற சீன மத்திய கிராமப்புறப் பணிக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்தைச் சேர்ந்த வாரியங்கள் சுட்டுரை உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விவாதப் பொருட்களை வழிநடத்தியதாக அந்நாட்டின் ஒரு சுதந்திர கள ஆய்வு இணையம் அண்மையில் சுட்டுரை நிறுவன ஆவணங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டது. குறிப்பாக, அவை மத்திய கிழக்கு மக்களிடையில் போலியான தகவல்களைப் பரப்பி, அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளுக்கு நன்மை பயக்கும் நோக்கமுடைய செய்திகளைக் கூறி வருகின்றன.
நேபாள அரசுத் தலைவர் பித்யா தேவி பண்டாரி அம்மையார் 25ஆம் நாள் நேபாள மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பிரசண்டாவைப் புதிய தலைமை அமைச்சராக நியமித்தார்.
டிசம்பர் 26ஆம் நாள் வரை சீனாவின் எர்தோஸ் வடிநிலத்தின் சாங்ட்சிங் எண்ணெய் வயலிலுள்ள சுலிகே எரிவாயு வயலின் ஆண்டு உற்பத்தி அளவு 3004 கோடி கன மீட்டரை எட்டியது.
டிசம்பர் 25ஆம் நாள் சீன மக்கள் விடுதலை படையின் கிழக்கு மண்டலப் பிரிவு, தைவான் தீவைச் சுற்றியுள்ள கடல் மற்றும் வான்வெளியில் கூட்டுப் போர் தயார்நிலை பாதுகாப்பு ரோந்து மற்றும் கூட்டுச் சூட்டுப் பயிற்சிகளை மேற்கொண்டது.
2022ஆம் ஆண்டு சர்வதேச நிலைமையும் சீனாவின் வெளிநாட்டுறவும் என்ற ஆய்வுக் கூட்டத்தின் துவக்க விழாவில் சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ 25ஆம் நாள் உரையாற்றினார்.
சீன வணிக அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, கடந்த ஜனவரி முதல் நவம்பர் வரை, சீனாவில் அந்நிய முதலீட்டில் உண்மையாகப் பயன்படுத்தப்பட்ட தொகை 1 இலட்சத்து 15 ஆயிரத்து 609 கோடி யுவானாகும்.
அமெரிக்காவின் 2023 நிதியாண்டு தேசிய பாதுகாப்பு அங்கீகாரச் சட்டத்தில் டிசம்பர் 24ஆம் நாள் அந்நாட்டு அரசுத் தலைவர் பைடன் கையெழுத்திட்டார். இச்சட்டத்தில் சீனா தொடர்பான ஏராளமான எதிர்மறை அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இதற்குக் கடுமையான மனநிறைவின்மையையும் உறுதியான எதிர்ப்பையும் சீனா தெரிவித்துள்ளது.
சீன கோமின்டாங் புரட்சிரகக் கமிட்டி, சீன ஜனநாயக லீக், சீனத் தேசிய ஜனநாயகக் கட்டுமான சங்கம், சீன ஜனநாயக முன்னேற்றச் சங்கம், சீன விவசாயிகள் மற்றும் தொழிலாளர் ஜனநாயகக் கட்சி, சீன ச்சிகோங் கட்சி, சியூ சான் நிறுவனம், தைவான் ஜனநாயக தன்னாட்சி லீக் ஆகியவை டிசம்பர் 7ஆம் நாள் முதல் 23ஆம் நாள் வரை தனித்தனியாக பெய்ஜிங் மாநகரில் தேசிய பிரதிநிதிகள் மாநாட்டை நடத்தின. தேர்தல் மூலம் அவற்றின் புதிய மத்திய கமிட்டிகள் உருவாக்கப்பட்டன.
அண்மையில் அமெரிக்கா தன்னால் கூறப்பட்ட திபெத் மனித உரிமை பிரச்சினையைச் சாக்குபோக்காகக் கொண்டு, இரு சீன அதிகாரிகளின் மீது சட்டவிரோதமான தடை நடவடிக்கையை மேற்கொண்டது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டுக்கான அறிக்கையில், அடுத்த 5 ஆண்டுகள் மற்றும் மேலும் நீண்டகாலத்தில் உயர்நிலை வெளிநாட்டுத் திறப்புக்கு நெடுநோக்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
சீனாவின் வெளிநாட்டு தடைகளுக்கு எதிர்ப்பு சட்டத்தின்படி, யு மெள சுன், டோட் ஸ்தான் ஆகியோர் மீது தடை செய்ய முடிவு எடுத்துள்ளதாக சீன வெளியுறவு அமைச்சம் தெரிவித்தது.
சீனாவின் உருமுச்சி நகருக்கும் தகோர்கன் மாவட்டத்துக்குமிடையிலான விமான சேவையை China Southern விமான நிறுவனம் டிசம்பர் 23ஆம் நாள் அதிகாரப்பூர்வமாகத் துவங்கியது.
டிசம்பர் 21ஆம் நாள் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கும், ஆஸ்திரேலிய தலைமை ஆளுநர் ஹெல்லி மற்றும் தலைமை அமைச்சர் அல்பானிஸும் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து செய்தி அனுப்பி, இரு நாட்டு தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 50ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடினர்.
சீனாவின் லன்ச்சோ நகரத்தின் புதிய பகுதியிலிருந்து கிடைத்த தகவலின் படி, 265 டன் சர்க்கரையை ஏற்றிச்சென்ற தொடர் வண்டி, டிசம்பர் 21ஆம் நாள் லன்ச்சோ புதிய பகுதியிலுள்ள சொங்ச்சுவன் வடக்கு நிலையத்தை வந்தடைந்தது.
புதிய ரக கரோனா வைரஸ் பரவிய சுமார் 3 ஆண்டுகாலத்தில், சீனா பொது மக்களுக்கு பொருந்திய கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, பொது மக்களின் உயிர் பாதுகாப்பையும் ஆரோக்கியத்தையும் பேணிக்காத்து, பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியில் இந்நோயின் பாதிப்பை மிக பெருமளவில் குறைத்துள்ளது.
கோவிட்-19 தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தளர்த்துவதாக சீனா அண்மையில் அறிவித்தது. அதைத் தொடர்ந்து, சீனாவின் பல்வேறு இடங்களிலுள்ள வெளிநாட்டு வர்த்தகத் தொழில் நிறுவனங்கள் வெளிநாட்டு சந்தையில் ஒத்துழைப்பு வாய்ப்பைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
உலகளவில் முதலாவது 3200 டன் திறனுடைய காற்றாலை நிறுவல் கப்பல், ஜியாங்சூ மாநிலத்தின் சிடோங் நகரிலுள்ள துறைமுகம் ஒன்றிலிருந்து ஒப்படைப்புக்கான பயணத்தை தொடங்கியது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும் அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீயின் அழைப்பின் பேரில், ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வொங் அம்மையார் டிசம்பர் 20 மற்றும் 21ஆம் நாட்களில் சீனாவில் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
அறிவியல் தத்துவத்தில் வைரஸ் என்பது அழிக்கப்பட முடியாத ஒன்றாகும் . இருப்பினும் கடந்த மூன்று ஆண்டுகளாக அனைவரும் இன்னல்களைப் புறக்கணித்து கரோனா தடுப்பில் ஈடுபடுவதற்கான காரணம் வளர்ச்சி மட்டுமே ஆகும்.
சீன ஊடகக் குழுமம் மற்றும் ஹாய்நான் மாநில அரசின் கூட்டு ஏற்பாட்டில், 4வது ஹாய்நான் தீவு சர்வதேசத் திரைப்பட விழா டிசம்பர் 18ஆம் நாள் சான்யா நகரில் துவங்கியது.
அமெரிக்க அரசு நிறுத்தத்தைத் தவிர்க்கும் வகையில், அந்நாட்டின் அரசுத் தலைவர் ஜோ பைடன் டிசம்பர் 16ஆம் நாள் தற்காலிக நிதி ஒதுக்கீட்டு மசோதாவில் கையொப்பமிட்டார்.
இந்திய ரிசர்வு வங்கி வெள்ளிகிழமை வெளியிட்ட தரவுகளின் படி, டிசம்பர் 9ஆம் நாள் வரை, இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு, 290 கோடி அமெரிக்க டாலருக்கு மேல் அதிகரித்ததோடு, 56 ஆயிரத்து 407 கோடி அமெரிக்க டாலரை எட்டியுள்ளது.
தொலைதூரப் பகுதிகளுக்கு சுகாதாரப் பொருட்கள் மற்றும் அன்றாடத் தேவைகளை வழங்கும் சீனாவின் நிதியுதவி திட்டம், நேபாளத்தின் காத்மாண்டு பள்ளத்தாக்கில் உள்ள லலித்பூரில் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
அமெரிக்காவின் செனெட் அவை 2023 நிதியாண்டுக்கான தேசியப் பாதுகாப்பு அங்கீகாரச் சட்டத்தை டிசம்பர் 15ஆம் நாள் நிறைவேற்றியது. இது தொடர்பாக நடைபெற்ற வாக்கெடுப்பில் ஆதரவாக 83 வாக்குகளும், எதிராக 11 வாக்குகளும் பதிவாகின.
உயிரினப் பல்வகைமைக்கான பொது ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட தரப்புகளின் 15ஆவது மாநாடு துவங்கும் வேளையில் சீன ஊடகக் குழுமத்தின் வட அமெரிக்கச் செய்தியாளர் நிலையம், 2022 உலக வளர்ச்சிக்கான நடவடிக்கை என்னும் முன்மொழிவை முன்வைத்து, உலக காலநிலை மாற்றத்திலும் தொடரவல்ல வளர்ச்சியிலும் கவனம் செலுத்தி வருகின்றது.
அமெரிக்காவின் கண்காணிப்பு நிறுவனங்களுடன் இணைந்து, மேலும் நிதானமான சர்வதேசக் கண்காணிப்புச் சூழலை உருவாக்கி, உலக முதலீட்டாளர்களின் சட்டப்பூர்வ உரிமை நலன்களைக் கூட்டாகப் பேணிக்காக்க சீனா விரும்புகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் குளிர்கால உச்சிமாநாடு டிசம்பர் 15ஆம் நாள் பெல்ஜியத்தின் தலைநகர் பிரசல்ஸில் நிறைவடைந்தது. இம்மாநாட்டில், ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளின் தலைவர்கள், ரஷியா மீதான 9ஆவது சுற்று தடை திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
டிசம்பர் 14ஆம் நாள், சுற்றுலா பயணிகள், சே தா மு வடிநிலத்திலுள்ள சிங்ஹாய் மாநிலத்தின் து லன் மாவட்டத்தில் அழகான விண்மீன் மண்டல காட்சியைக் கண்டுகளித்தனர்.
ஐநா பாதுகாப்பவையில் 14ஆம் நாள் நடைபெற்ற பலதரப்புவாதம் பற்றிய விவாதத்தில் ஐ.நா.வுக்கான சீன நிரந்தரப் பிரதிநிதி ஜாங் ஜுன் கூறுகையில், சர்வதேசச் சமூகம் உண்மையான பலதரப்புவாதத்தை நடைமுறைப்படுத்தி, உலகம் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களைப் பயனுள்ள முறையில் சமாளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
சீனத் தேசிய புள்ளிவிபரப் பணியகம் வியாழக்கிழமை வெளியிட்ட புதிய தகவல்களின்படி, நவம்பர் திங்களில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து மீண்டு வருகின்றது.
டிசம்பர் 14ஆம் நாள் நடைபெற்ற 15ஆவது சீன-இலத்தின் அமெரிக்க தொழில் முனைவோர் உச்சி மாநாட்டின் துவக்க விழாவிற்கு சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் வாழ்த்துச் செய்தி அனுப்பினார்.
பல்வேறு இடங்களில் ஏற்பட்ட வன்முறை ஆர்ப்பாட்டங்களைச் சமாளிக்கும் வகையில், பெருவில் நாடளவில் 30 நாட்கள் நீடிக்கும் அவசர நிலை செயல்படுத்தப்பட்டதாக அந்நாட்டின் தேசியப் பாதுகாப்பமைச்சர் ஓடரோலா 14ஆம் நாள் அறிவித்தார்.
2022ஆம் ஆண்டு முதல் 2035ஆம் ஆண்டு வரை, உள்நாட்டு தேவையை விரிவுபடுத்துவதற்கான நெடுநோக்கு இலக்குகளைச் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியும் அரசவையும் அண்மையில் வெளியிட்டன.
பனி நகர் என்று அழைக்கப்பட்ட ஹார்பினில், பல விதமான பனி சிற்பங்கள், பயணிகளை வியக்கச் செய்கின்றன. குளிர்காலத்தில் முழு நகரும், மாபெரும் பனி சிற்பக் கலையகமாக மாறியுள்ளது.
சீனத் துணை வெளியுறவு அமைச்சர் சியே ஃபெங், சீனாவில் பயணம் மேற்கொண்ட ஆசிய-பசிபிக் விவகாரங்களுக்கான அமெரிக்கத் துணை வெளியுறவு அமைச்சர் டேனியல் கிரிட்டன்ப்ளிங்க், சீன விவகாரத்துக்கான வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு மன்றத்தின் உயர்நிலை இயக்குநர் லாரா ரோசன்பெர்கர் ஆகியோருடன் டிசம்பர் 11 மற்றும் 12ஆம் நாட்களில் ஹெபே மாநிலத்தின் லாங்பாங் நகரில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அமெரிக்கா தவறான செயல்களைக் காலதாமதமின்றி திருத்தி, சீன-அமெரிக்க இயல்பான வர்த்தகத்தையும் சில்லுகள் உள்ளிட்ட முக்கிய உலக தொழிற்துறை மற்றும் விநியோக சங்கிலியைப் பேணிக்காக்க வேண்டும்.
சில ரஷிய தூதாண்மை அதிகாரிகள் 2023ஆம் ஆண்டின் துவக்கத்தில் அமெரிக்காவிலிருந்து வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டள்ளனர் என்று ரஷிய துணை வெளியுறவு அமைச்சர் லியாபுகோவ் 13ஆம் நாள் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க-ஆப்பிரிக்க உச்சி மாநாட்டை முன்னிட்டு, உலகப் பேச்சுவார்த்தை ஆய்வகம் எனும் தென்னாப்பிரிக்காவின் புகழ்பெற்ற சிந்தனைக் கிடங்கு உலக ஒழுங்குமுறையின் மாற்றத்தில் பைடன் அரசும் ஆப்பிரிக்காவும் என்ற ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
லுஷெங் ஒரு வகை இசைக் கருவியாகும். குய் சோ மாநிலத்தில் உள்ள மியாவ் மற்றும் துங் இனத் தன்னாட்சி மாவட்டத்தில் ஐந்தாண்டு காலங்களுக்கு ஒரு முறை நடைபெறும் லுஷெங் விழா அண்மையில் நடைபெற்றது. உள்ளூர் மியாவோ தோழர்கள் பாடி நடனமாடி, அறுவடையைக் கொண்டாடினர்.
உப்பிட்டு உலர்த்திய பன்றி இறைச்சி சீனாவிலுள்ள தெற்குப் பகுதியின் சிறப்பு உணவுப் பொருளாகும். ஒவ்வொரு குளிர்காலத்திலும், உள்ளூர் மக்கள் இத்தகைய சுவையான உணவு வகையைத் தயாரிப்பது வழக்கமாகியுள்ளது.
அணு மின் நிலையம் தாக்குதல்களால் அச்சுறுத்தப்படுவதைத் தடுக்க ரஷியாவும் சர்வதேச அணு ஆற்றல் நிறுவனமும் இணைந்து ஸப்போரிஷியா அணுமின் நிலையத்தின் பாதுகாப்புக் குறித்துக் கலந்தாய்வு நடத்தி வருவதாக 12ஆம் நாள் ரஷிய வெளியுறவு அமைச்சகத்தின் துணை அமைச்சர் வெர்ஷினென் தெரிவித்தார்.
இரு தரப்புகளுக்கிடையேயான வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தி, ஒன்றுக்கொன்று பயனளிக்கும் கூட்டு வெற்றி பெற வேண்டுமென அவர்கள் விருப்பம் தெரிவித்தனர்.
அமெரிக்க அரசியல் செய்தி வலைத்தளமான பொலிடிகோ 11 ஆம் நாள் வெளியிட்ட செய்தியின் படி, அடுத்த சில நாட்களில் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருவதற்கான விண்ணப்பத்தை கொசோவோ அதிகாரப்பூர்வமாகச் சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளது என்று கொசோவோ அதிகார வட்டாரத்தின் முதல் துணை தலைமையமைச்சர் பெஸ்னிக் பிஸ்லிம் கூறினார்.
டிசம்பர் 11ஆம் நாள் சீனாவின் அன் ஹுய் மாநிலத்தின் மஞ்சள் மலைப் பகுதியின் வெப்ப நிலை 0 டிகிரிக்குத் திரும்பியதை அடுத்து, மலைப் பகுதியைப் பனி மூடி அழகான காட்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் இயற்கை பாதுகாப்புக் கூட்டணி பெயர் பட்டியல் புதுப்பிக்கப்பட்டதை , இக்கூட்டணி 10ஆம் நாள் கடனாவின் மன்ட்ரீல் நகரில் அறிவித்தது. சீனாவின் ஹுவாங் குவோ ஷூ காட்சி தலம், ஷேன் நுண் ஜியா தேசிய பூங்கா முதலிய 11 புகலிடங்கள், இப்பட்டியலில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன.
தற்பொது விவாதத்தில் உள்ள ரஷியா, கசகஸ்தான், உஸ்பெக்ஸ்தான் முத்தரப்பு எரிவாயு கூட்டணித் திட்டம் மேற்கு நாடுகள் கூறிய அரசியல் விளையாட்டு அல்ல என்று ரஷிய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் 10ஆம் நாள் தெரிவித்தார்.
புதிய வரலாற்று தொடக்க புள்ளியில் நின்று, பழமையான மற்றும் இளமையான சீன- வளைகுடா ஒத்துழைப்புக் கவுன்சிலின் உறவில் மேலும் பெரும் புத்துயிர் பெறப்படும் என நம்புகின்றோம்.
தென் தமிழகத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தின் தலா 1,000 மெகாவாட் திறன் கொண்ட மீதமுள்ள நான்கு தொகுதிகள், 2027 ஆம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என இந்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
மாண்டஸ் புயல் முன்னேறி வருவதால் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் கடலோரப் பகுதிகளுக்கு, இந்திய வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகளவில் முதலாவது C919 என்னும் பெரிய ரக பயணியர் விமானம் ஷாங்காய் புடொங் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, ஹொங்ச்சியௌ விமான நிலையத்தைச் சென்றடைந்தது.
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் டிசம்பர் 8ஆம் நாள் ரியாத் அல் யமாமா அரண்மனையில் சௌதி அரேபிய பட்டத்து இளவரசரும் தலைமை அமைச்சருமான முகமெத் பின் சல்மான் பின் அப்தெல் அசிஸ் அல் சௌதியுடன் சந்தித்து பேசினார்.
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் டிசம்பர் 7 முதல் 10ஆம் நாள் வரை சௌதி அரேபியவின் லியாட்டில் சீனா-அரபு நாடுகள் உச்சிமாநாடு மற்றும் சீன-வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளவும், சௌதி அரேபியாவில் அரசுமுறை பயணம் மேற்கொள்ளவும் உள்ளார்.
சீனாவின் முன்னாள் அரசுத் தலைவர் ஜியாங் சேமினின் மறைவு குறித்து பல உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கிற்கு தொலைபேசி, கடிதங்கள் மற்றும் பிற வழிகளில் தொடர்ந்து ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தனர்.
சீனச் சுங்கத் துறை தலைமைப் பணியகம் 7ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, இவ்வாண்டின் முதல் 11 மாதங்களில் சீனாவில் சரக்குப் பொருட்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியின் மொத்த மதிப்பு 38 ஆயிரத்து 34 ஆயிரம் கோடி யுவானாகும். இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 8.6 விழுக்காடு அதிகமாகும்.
2022ஆம் ஆண்டிற்கான சீன-அரபு ஊடக ஒத்துழைப்பு கருத்தரங்கு சீன ஊடக குழுமம் மற்றும் சௌதி அரேபிய செய்தி துறையின் கூட்டு ஏற்பாட்டில் லியாட் நகரில் நடைபெற்றது.
டிசம்பர் 7ஆம் நாள் காலை 9:15 மணியளவில், சீனாவின் குவெய்ச்சோ-11 Y2 ஏவூர்தி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதன் மூலம், விடிஇஎஸ் எனும் செயற்கைக்கோள் திட்டமிட்ட சுற்றுவட்டப் பாதையில் அனுப்பப்பட்டது.
கோப் 15 எனும் உயிரின பல்வகைமை பற்றிய ஐ.நாவின் பொது ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட தரப்புகளின் 15ஆவது மாநாட்டின் 2ஆவது கட்ட கூட்டம் டிசம்பர் 7ஆம் நாள் கனடாவின் மாண்ட்ரீலில் நடைபெறவுள்ளது.
செங்து, சுங்ஜின் ஆகிய இரண்டு மாநகர்களின் தலைமையில், சீனாவின் சிச்சுவான் மாநிலத்தில் புதிய ரக தொழில்மயமாக்கம், தகவல்மயமாக்கம், நகரமயமாக்கம், வேளாண் நவீனமயமாக்கம் ஆகியவை ஒத்திசையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஏப்ரல் மாதம் தொடங்கிய 2022-2023 நிதியாண்டில் கிட்டத்தட்ட எட்டு மாதங்களில் மியான்மர், விவசாய பொருட்களின் ஏற்றுமதி மூலம் 228 கோடி அமெரிக்க டாலர்களை ஈட்டியுள்ளது என்று அந்நாட்டின் வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சொந்த எரிசக்தி தேவைக்கிணங்க, எதிர்காலத்தில் இந்தியா ரஷியாவிலிருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்குவதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.
2022 சர்வதேச செயற்கை நுண்ணறிவு மற்றும் கல்வி கூட்டம் டிசம்பர் 5 மற்றும் 6 ஆகிய நாட்களில் இணையம் வழியாக நடைபெற்றது. சீன கல்வி அமைச்சகமும் யுனெஸ்கோ அமைப்பும் கூட்டாக நடத்திய இக்கூட்டம் உலக அளவில் நேரலை செய்யப்பட்டது.
இந்தியாவின் தலைமையின் கீழ் நடைபெறும் முதல் ஜி20 ஷெர்பா கூட்டம், மேற்கு மாநிலமான ராஜஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கியது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக, கைபேசி செயலியை அறிமுகப்படுத்தவுள்ளதாக சுற்றுலா மற்றும் நிலங்கள் துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
ஒபெக் மற்றும் ஒபெக் அமைப்புச் சாராத பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் டிசம்பர் 4ஆம் நாள் காணொளி வழியில் 34வது அமைச்சர்களின் கூட்டத்தை நடத்தின. இதில் முன்பு நிர்ணயித்த எண்ணெய் உற்பத்தி குறைப்பு இலக்கை நிலைநிறுத்துவதென முடிவு செய்யப்பட்டது.
சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் 2வது தொகுதி சுற்றுலா தலங்களின் பெயர் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. அதில் செங் து மாநகரின் வூ ஃபாங் என்ற சிறு வட்டம் சேர்க்கப்பட்டுள்ளது.
சீனாவின் போச்சொங்-கென்லி எண்ணெய் வயல்களின் கரை மின்சாரப் பயன்பாட்டுத் திட்டப்பணியின் உயர் மின்னழுத்த கடலடி கம்பியும் கடற்பரப்பிலுள்ள 3 மின்சார சக்தி தளங்களும் வெற்றிகரமாக மின்னாற்றலை வினியோகித்துள்ளன.
பொருள் சாரா கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான யுனேஸ்கோ 17ஆவது அரசாங்களுக்கிடை குழுக்கூட்டம் 3ஆம் நாள் மொராக்கோவின் தலைநகர் பாலாத்தில் நிறைவடைந்தது. இக்கூட்டத்தில் மொத்த 47 திட்டங்கள் ஐ.நாவின் ஐ.நா பொருள் சாரா கலாச்சார பாரம்பரியங்களின் பட்டியலில் புதிதாகச் சேர்க்கப்பட்டன.
ஒமிக்ரான் திரிபு உலகளவில் பெரிதும் பரவி வரும் நிலையில், கோவிட்-19 தொற்றுநோய்க்கான அவசரக் காலம் முடிவுக்கு வந்துள்ளது என்று அறிவிப்பதற்கு இன்னும் நேரம் தேவை என்று உலகச் சுகாதார அமைப்பு 2ஆம் நாள் தெரிவித்தது.
கிழக்கு இந்திய மாநிலமான மேற்கு வங்கத்தில் நடந்த குண்டுவெடிப்பில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸின் உள்ளூர் தலைவர் உட்பட 3 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.
ஐ.நாவின் ஜெனிவா அலுவலகம் மற்றும் ஸ்விட்சர்லாந்திலுள்ள மற்ற சர்வதேச அமைப்புகளுக்கான, சீன நிரந்தரப் பிரதிநிதி ச்சேன் ஷூயு டிசம்பர் முதல் நாள், சர்வதேசக் குடிபெயர்தல் அமைப்பின் கூட்டத்தில் குடிபெயர்வோர் பிரச்சினை குறித்து சீனாவின் நிலைப்பாட்டை விளக்கிக் கூறினார்.
ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபுலிலுள்ள மசூதி ஒன்றில் டிசம்பர் 2ஆம் நாள் தற்கொலை குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 2 தாக்குதல் நடத்தியவர்கள் உள்ளிட்ட 3 பேர் இறந்தனர். 2 பேர் காயமடைந்தனர்.
சென் சோ 14 விண்கலத்தின் விண்வெளி வீரர்கள், சென் சோ 15 விண்கலத்தின் விண்வெளி வீரர்கள் ஆகியோர் டிசம்பர் 2ஆம் நாளிரவு ஒப்படைப்பு விழாவை நடத்தினர். இதில் அவர்கள் சீன விண்வெளி நிலையத்தின் சாவியை ஒப்படைத்தனர்.
ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் தூதாண்மை அதிகாரிகள், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சீனாவின் வெளியுறவு அமைச்சகத்திற்குச் சென்று, முன்னாள் சீனத் தலைவர் ஜியாங் ஜெமினின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.
இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவில் வேலையின்மை விகிதம் நவம்பர் மாதத்தில் 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு 8 விழுக்காடாக உயர்ந்துள்ளது என்று தெரியவந்துள்ளது.
சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் சாவ் லீ ஜியன் டிசம்பர் 2ஆம் நாள் கூறுகையில், அமெரிக்கத் தரப்பின் கூற்றில், சரி மற்றும் தவறு குழப்பமாகக் கொள்ளப்பட்டு, பனி போர் சிந்தனையும் தவறான புரிதலும் நிறைந்துள்ளது.
சீன மற்றும் அமெரிக்க அரசுத் தலைவர்களின் பாலி தீவுப் பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக உள்ளது. தத்தமது நலன்கள், இலக்குகள் மற்றும் கொள்கைகள் குறித்து இரு தரப்பினரும் தெரிவான மற்றும் நேரடியான முறையில் பரிமாற்றம் மேற்கொள்ளவது மிகவும் முக்கியமானது என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கூறினார்.
அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடன், பிரான்ஸ் அரசுத் தலைவர் இம்மானுவேல் மக்ரோன் ஆகியோர் டிசம்பர் முதல் நாள் வெள்ளை மாளிகையில் வெளிப்படையற்ற பேச்சுவார்த்தை நடத்தி, அமெரிக்காவின் பணவீக்க குறைப்பு சட்டம் குறித்து விவாத்துள்ளனர்.
சீனத் துணைத் தலைமை அமைச்சர் சுன் ட்சுன்லான், நோய் தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கையை மேம்படுத்துவதற்கான கருத்து மற்றும் ஆலோசனைகளைக் கேட்டறிந்தார்.
அமெரிக்க மருத்துவக் கழக இதழில் அண்மையில் வெளியிடப்பட்ட புதிய ஆய்வின் படி, 1990 முதல் 2021ஆம் ஆண்டு வரை, அமெரிக்காவில் 11 இலட்சத்து 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர்.
அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டியை உயர்த்துவது இன்னும் சில காலத்துக்கு நீட்டிக்கும் என்று ஃபெடரல் ரிசர்வ் வங்கித் தலைவர் ஜெரோம் பாவெல் 30ம் நாள் புதன்கிழமை தெரிவித்தார்.
சீனாவில் சொந்தமாக தயாரிக்கப்பட்ட சி919 ரக பயணியர் விமானம் அண்மையில் டி5 சோதனையை முடித்து கொண்டுள்ளது. குறிப்பாக, இந்த ரக விமானத்தை ஓட்டும் தகுதியை 15 விமான ஓட்டுநர்கள் பெற்றுள்ளனர்.
லீக்கெச்சியாங் கூறுகையில், இரு நாட்டுறவை புதிய நிலைக்கு முன்னெடுத்து, பிரதேசத்தின் அமைதி நிலைப்பு மற்றும் வளர்ச்சியைப் பேணிக்காக்க விரும்புவதாக தெரிவித்தார்.
சீன ஊடகக் குழுமத்தின் தலைவர் ஷென் ஹாய்சியோங், நவம்பர் 29ஆம் நாள் பெய்ஜிங்கில் இருந்து அமெரிக்க கூட்டு செய்தி நிறுவனத்தின் தலைவர் டேய்சி வீரசிங்கமுடன் சந்திப்பு நடத்தினார்.
சீனாவின் சிச்சாங் செயற்கைக் கோள் ஏவு மையத்திலிருந்து, லாங்மார்ச்-2 டி ஏவூர்தி மூலம், சீனாவின் யாவ்கான்-36 செயற்கைக் கோள் பெய்ஜிங் நேரப்படி நவம்பர் 27ஆம் நாளிரவு 8:23 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.
அண்மையில், குளிர்ந்த காற்று அடிக்கடி வீசுவதன் காரணமாக, ஷான்சி மாநிலத்தின் ஜுவோச்சுவான் மாவட்டத்தில் உள்ள தைஹாங் மலைகளில் மேகங்களின் கடல் போன்ற அழகான காட்சிகளைக் கண்டு ரசியுங்கள்.
நாஞ்சிங் விமான மற்றும் விண்வெளி பல்கலைக்கழகத்தின் 11வது பட்டதாரிகள் புத்தாக்கப் பரிசோதனை போட்டி நவம்பர் 25ஆம் நாள் இப்பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. மாணவர்களின் புத்தாக்கச் சிந்தனை மற்றும் நடைமுறை திறனை இப்போட்டி முழுமையாக வெளிக்காட்டுகின்றது.
கரும்பு துறையின் இயந்திரமயமாக்கல் கூட்டம் நவம்பர் 25ஆம் நாள் குவாங்சி சுவான் இனத்தன்னாட்சிப் பிரதேசத்தின் நான்னிங் நகரில் நடைபெற்றது. இது பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மாநாட்டின் எழுச்சி பற்றி ஆப்பிரிக்காவுக்கு விளக்கம் செய்யும் கூட்டத்தையும், 6ஆவது சீன-ஆப்பிரிக்க இளம் தலைவர்களின் கருத்தரங்கையும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் சர்வதேச தொடர்பு துறை காணொளி வழியாக நடத்தியது.
சந்திரன் ஆய்வுக்காக அனுப்பப்படும் சாங்ஏ-6 விண்விலகத்தின் சர்வதேச ஒத்துழைப்பு தொடர்பான முடிவுகளை, சீனத் தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இக்கூட்டத்தில் வெளியிட்டது.
கத்தாரில் நடைபெறுகின்ற உலக கோப்பை கால்பந்து விளையாட்டில், இங்கிலாந்து வீரர் கிரீலிஷ் கோல் அடைந்த பிறகு இரு கைகளை தூக்கி நடனம் ஆடிதார். இந்தத் கொண்டாட்ட நடவடிக்கை, மூளைவாத நோய்யால் பாதிக்கப்பட்ட அவரது ரசிகர் ஃபின்லிக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டது.
அமெரிக்காவில் இவ்வாண்டில் நவம்பர் 23ஆம் தேதி வரை 608 துப்பாக்கிச் சூடும் சம்பவங்கள் நடத்தப்பட்டன. அவற்றில், டாக்சாஸ் மாநிலத்தின் யுவல்டி நகரில் நிகழ்ந்த துப்பாக்கி சம்பவத்தில் 21 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உயிரிழந்தனர்.
நவம்பர் 18ஆம் நாள் தாய்லாந்தின் தலைநகரான பாங்காங்கில் நடந்த எபெக் தலைவர்களின் அதிகாரப்பூர்வமற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட சீன வணிக அமைச்சர் வாங் வென்டாவோ அமெரிக்க வர்த்தக பிரதிநிதி கேத்தரின் டேய் அம்மையாருடன் சந்திப்பு நடத்தினார்.
சீனாவில் 2035ஆம் ஆண்டுக்குள் நியாயமான உருவரை, மேம்பட்ட செயல்திறன் ஆகியவற்றுடன் கூடிய நவீனமயமான யாங்சி ஆற்றின் துறைமுக அமைப்புமுறை உருவாக்கப்படும் என்று சீனப் போக்குவரத்து அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன வணிகத் துறை அமைச்சர் வாங் வென் தாவும் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி கேத்ரின் தையும், கடந்த வெள்ளிக்கிழமை சந்திப்பு நடத்தியது குறித்து சீன வணிக அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஷு யுதிங் அறிமுகப்படுத்தினார்.
இரு நாடுகளுக்கிடையே மக்க்ளின் பரிமாற்றம் மிகவும் முக்கியமானதாக உள்ளது. பல்வேறு துறைகளில் இரு நாட்டு மக்களிடையேயான தொடர்பை விரிவாக்க ஊக்கமளிக்க வேண்டும்.
துருக்கி அரசுத் தலைவர் தயீப் எர்டோகனும் கியூபா அரசுத் தலைவர் மிகுல் டியஸ் கேனலும் 23ஆம் நாள் துருக்கி தலைநகர் அங்காராவில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
சீனாவுக்கு அரை மின் கடத்திகளை விற்கும் பிரச்சினையில் நெதர்லாந்து தனது பொருளாதார நலன்களைப் பேணிக்காக்கும் விதம் செயல்படும் என்று அந்நாட்டின் வெளிநாட்டு வர்த்தக மற்றும் வளர்ச்சி ஒத்துழைப்புத் துறை அமைச்சர் ஷ்ரைனர் மஹெர் கூறியதாக ப்ளூம்பெர்க் நியூஸ் செய்தி வெளியிட்டது.
ஐ.நா பாதுகாப்பவையின் 1267 குழு, பயங்கரவாத எதிர்ப்புக் குழு, 1540 குழு ஆகியவற்றின் பணிகளில் பங்கெடுத்து, பயங்கரவாத எதிர்ப்புக்கான சர்வதேச ஒத்துழைப்பை சீனா தொடர்ந்து முன்னெடுக்கும்.
பிரிட்டன் அரசின் அங்கீகாரம் கிடைக்காத நிலையில் சுதந்திரத்துக்கான பொது வாக்கெடுப்பை ஸ்காட்லாந்து நடத்தக் கூடாது என்று பிரிட்டனின் உச்ச நீதிமன்றம் 23ஆம் நாள் தீர்ப்பு அளித்துள்ளது.
ஓடிசாவில் உள்ள டாக்டர் அப்துல் கலாம் தீவிலிருந்து அக்னி 3 மத்திய தூர எறிவிசை ஏவுகணையை இந்தியா 23ஆம் நாள் வெற்றிகரமாகப் பரிசோதித்துள்ளது என்று இந்திய தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அசாம் மற்றும் மேகாலய மாநில எல்லைக்கு அருகே பொதுமக்கள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டதாக மேகாலய முதல் அமைச்சர் கான்ரட் சங்மா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
கத்தாரில் சீனாவிலிருந்து வந்த செய்தியாளர்கள் ராட்சத பாண்டாக்களைப் பார்க்கச் சென்றனர். சிச்சுவான் பேச்சுவழக்கைக் கேட்டதும், ராட்சத பாண்டா உற்சாகமாக பதில் அளித்தது.
சீன வெளியுறவு அமைச்சகத்தின் எல்லை மற்றும் கடல் விவகாரப் பிரிவின் தலைவர், ஜப்பான் வெளியுறவு அமைச்சகத்தின் ஆசிய-அட்லாண்டிக் பிரிவின் தலைவர் ஆகியோர், சீன-ஜப்பான் கடல் விவகாரங்களின் 14வது உயர்நிலை கலந்தாய்வு கூட்டத்துக்கு 22ஆம் நாள் தலைமை தாங்கினர்.
60 விழுக்காடு செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் உற்பத்தி அளவை அதிகரித்துள்ளதாக ஈரான் அணு ஆற்றல் அமைப்பு 22ஆம் நாள் தெரிவித்தது. சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் ஆளுநர் குழு ஏற்றுக்கொண்ட தொடர்புடைய தீர்மானத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை இது என்று கூறப்பட்டது.
மாறி வரும் சூழ்நிலையில் பொருளாதார வளர்ச்சி மற்றும் நிதி ஒத்துழைப்பு என்ற தலைப்பில் 2022ஆம் ஆண்டு ஃபைனான்சியல் ஸ்ட்ரீட் கருத்தரங்கு 21ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது.
சீனத் தொலை உணர்வறி தரவுகள் மற்றும் பயன்பாட்டுச் சேவை மேடையின் வெளியீடு மற்றும் தேசிய விண்வெளி ஆய்வுப் பணியகத்தின் சர்வதேச ஒத்துழைப்பு மையத்தின் திறப்பு விழா 21ஆம் நாள் ஹாய் கோ நகரில் நடைபெற்றது.
நவம்பர் 22ஆம் நாள், சீனாவின் சியோ ஷுயெ என்ற சூரியப் பருவ நாள். இந்நாளுக்குப் பிறகு வானிலை மென்மேலும் குளர்ச்சியாக இருக்கும். மழை பெய்யும் வாய்ப்பு அதிகரிக்கும்.
நிதி தொடர்பான ஊழல், அமைச்சரவைக்கு குறைந்து வரும் ஆதரவு உள்ளிட்ட காரணங்களால் ஜப்பான் உள்துறை அமைச்சர் மினோரு தெராடாவைத் தலைமை அமைச்சர் பியூமியோ கிஷிடா ஞாயிற்றுக்கிழமை பதவி நீக்கம் செய்தார்.
6ஆவது சீன-தெற்காசிய பொருட்காட்சி மற்றும் 26ஆவது சீனா குன்மிங் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி பொருட்காட்சியில் 20 ஆம் நாள் பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்புத் திட்டத்தின் கையெழுத்திடும் விழா நடைபெற்றது. 169 முதலீட்டு ஒப்பந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றின் மொத்த முதலீட்டுத் தொகை, 40 ஆயிரம் கோடிக்கு மேற்பட்ட யுவானாகும்.
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகியவை சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் செயற்குழுக் கூட்டத்தில் முன்வைத்த ஈரானுக்கு எதிரான தீர்மானம், அரசியல் நோக்கத்துடன் ஈரானின் மீது நிர்ப்பந்தம் திணிக்கும் செயலாகும்.
தற்போது பல உயர் தொழில் நுட்ப நிறுவனங்களின் சாதனைகள் வீழ்ச்சி அடைந்து, பங்குவிலை பெரிய சரிவைச் சந்தித்துள்ளது. இத்தொழிலில் ஆயிரக்கணக்கான பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
6ஆவது சீன-தெற்காசிய பொருட்காட்சியும் 26ஆவது சீன குன்மிங் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகப் பொருட்காட்சியும் நவம்பர் 19ஆம் நாள் யுன்னான் மாநிலத்தின் தலைநகர் குன்மிங்கில் துவங்கியது.
தாய்லாந்து தலைமையமைச்சரின் மனைவி நரபோங்கின் அழைப்பின் பேரில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் மனைவி பெங் லியுவான் அம்மையார், ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் 29ஆவது தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள தலைவர்களின் மனைவிகளுடன் தாய்லாந்து தேசிய கலை அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டார்.
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், நவம்பர் 17ஆம் நாள் மாலை, தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் பிலிப்பைன்ஸின் அரசுத் தலைவர் மாகோஸுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
வியன்னாவில் நடைபெற்ற சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் செயற்குழுக் கூட்டத்தில் ஈரானின் பாதுகாப்பு விவகாரம் குறித்து ஏற்றுக் கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக சீனா வாக்களித்தது.
சீன மத்திய ஊடகக் குழுமத்தின் ஆப்பிரிக்க நிலையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட “புதிய பயணத்தில் சீனாவும் உலகமும்”என்ற சீன-ஆப்பிரிக்க ஊடகக் கருத்தரங்கு, 16ஆம் நாள் கென்யா தலைநகர் நைரோபியில் நடைபெற்றது.
சீன மத்திய ஊடகக் குழுமத்தின் தலைவர் ஷேன் ஹாய் ஷியொங், இந்தோனேசிய தேசிய வானொலி நிலையத்தின் தலைவர் யீ ஹன்ட்ரஸ்மொ ஆகியோர், இரு தரப்பு ஒத்துழைப்பு குறிப்பாணையில் கையொப்பமிட்டுள்ளனர்.
சீனா மற்றும் இந்தோனேசியாவின் ஒத்துழைப்பில் கட்டியமைக்கப்பட்ட ஜகார்த்தா-பான்துங் அதிவிரைவு இருப்புப் பாதையின் சோதனை அண்மையில் முழுமையான வெற்றியைப் பெற்றுள்ளது.
ஜி20 அமைப்பு தலைவர்களின் 17ஆவது உச்சிமாநாடு, 16ஆம் நாள் மாலை பாலி தீவில் நிறைவடைந்தது. இந்தோனேசியாவைத் தொடர்ந்து, இவ்வமைப்பின் தலைவர் நாடாக, இந்தியா பதவியை ஏற்றது.
அரசு தலைவர் பதவிக்காக மீண்டும் போட்டியிடுவதாகவும், அதே நாள் அமெரிக்க கூட்டாட்சி தேர்தல் ஆணையத்திடம் அதிகாரப்பூர்வ ஆவணங்களை ஒப்படைத்ததாகவும் முன்னாள் அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்ப் 15ஆம் நாளிரவு அறிவித்தார்.
நவம்பர் 15 முதல் 18ஆம் நாள் வரை, சர்வதேச கால்நடை வளர்ப்பு துறை கண்காட்சி ஜெர்மன்னின் ஹனோவர் நகரில் நடைபெறுகின்றது. 55 நாடுகளைச் சேர்ந்த 1700 தொழில் நிறுவனங்கள் இதில் கலந்துகொண்டுள்ளன.
குளிர்காலத்தின் தொடக்கத்தில் சீனாவின் ஜியாங் சீ மாநிலத்தின் கன்ச்சோ நகரத்திலுள்ள யாங் மிங் ஏரி தேசிய பூங்காவில் மூங்கில், மரங்கள், ஏரி ஆகியவை உருவாக்கிய அழகான காட்சி உங்களுக்காக.
COP15 மாநாட்டின் தலைமை நாடான சீனா, தலைமை மற்றும் ஒருங்கிணைப்பு பங்கினை வெளிப்படுத்தி, உலகளாவிய உயிரினப் பல்வகைமை பாதுகாப்புப் பணியை முன்னேற்றி வருகிறது.
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் மனைவி பெங் லியுவான் அம்மையார் 15ஆம் நாள் காலை பாலி தீவில் இந்தோனேசிய அரசுத் தலைவரின் மனைவி இலியானா ஏற்பாடு செய்த ஜி20 உச்சிமாநாட்டில் தலைவர்களின் மனைவிகள் பங்கெடுக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.
இந்தியாவின் சில்லறை பணவீக்கம் அக்டோபர் மாதத்தில் 6.77 விழுக்காடாக குறைந்துள்ளதாக, புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றத்துக்கான ஐ.நா கட்டுக்கோப்பு ஒப்பந்த தரப்புகளின் 27ஆவது மாநாட்டின் சீன காட்சியிடத்தில், காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதில் தெற்கு-தெற்கு ஒத்துழைப்பு பற்றிய உயர் நிலை கருத்தரங்கு 14ஆம் நாள் நடைபெற்றது.
சீன மத்திய ஊடக குழுமம் தயாரித்த 《ஷிச்சின்பிங்கிற்குப் பிடித்த செவ்வியல் மேற்கோள்கள்》என்ற சிறப்புப் படம்(இந்தோனேசிய மற்றும் தாய்லாந்து மொழி), பல மொழிகளிலான 《சீனா, புதிய பயணம்》என்னும் ஆவணத் திரைப்படம் ஆகியவற்றின் ஒளிபரப்பு விழா பெய்ஜிங்கில் நடைபெற்றது.
சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மாவ் நிங் 14ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில், நடைபெறவுள்ள சீன மற்றும் அமெரிக்க அரசுத் தலைவர்களின் பேச்சுவார்த்தை குறித்து கூறுகையில், அமெரிக்காவின் மீதான சீனாவின் கொள்கை மற்றும் நிலைப்பாடு எப்போதும் தெளிவாக இருக்கின்றது என்று தெரிவித்தார்.
இஸ்ரேல் அரசுத் தலைவர் ஹேர்சொக் 13ஆம் நாள், புதிய அரசை அமைக்குமாறு, இஸ்ரேல் முன்னாள் தலைமை அமைச்சரும் லிகுட் குழுவின் தலைவருமான நேத்தன்யாஹூவுக்கு அழைப்பு விடுத்தார்.
இஸ்தான்புல் குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர், காவற்துறையால் கைது செய்யப்பட்டார் என்று துருக்கியின் உள்துறை அமைச்சர் சுலேமன் சொயிலூ 14ஆம் நாள் தெரிவித்தார்.
அமெரிக்காவின் புதிய நாடாளுமன்றத்தில் ஜனநாயகக் கட்சியினர் செனட் அவையைத் தொடர்ந்து கட்டுப்படுத்துவர் என்று உள்ளூர் ஊடகங்கள் சனிக்கிழமை இரவு தெரிவித்துள்ளன.
மியான்மர் 1.77 லட்சம் டன்னுக்கும் அதிகமாக மக்காச்சோள ஏற்றுமதி செய்து, அக்டோபர் மாதத்தில் 5.3 கோடி டாலர் வருவாயை ஈட்டியுள்ளதாக அந்நாட்டு வணிக அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ கலப்பு நெல் உதவி மற்றும் உலக உணவு பாதுகாப்பு தொடர்பான சர்வதேச மன்றத்தில் 12ஆம் நாள் கலந்து கொண்ட போது, கலப்பு நெல் தொழில்நுட்பம், சீனா உணவு தன்னிறைவின் அதிசயத்தை அடைய உதவியது மட்டுமல்லாமல், உலகளாவிய உணவு பற்றாக்குறையைத் தீர்க்கவும் முக்கியப் பங்காற்றியுள்ளது என்றார்.
சீனத் தலைமையமைச்சர் லீ கெச்சியாங் கம்போடியாவின் ஃபெனோம் பென்னில் கிழக்கு ஆசிய ஒத்துழைப்புத் தலைவர்களின் தொடர் கூட்டங்களில் 12ஆம் நாள் கலந்து கொண்ட போது, ஜப்பானிய தலைமையமைச்சர் கிஷிடா வென்சியோங், தென் கொரிய அரசுத் தலைவர் யின் சக்-யோ, பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவர் மார்கோஸ் ஆகியோருடன் அடுத்தடுத்து சந்திப்பு நடத்தினார்.
தேசிய அளவில் சீனாவின் உத்தரவாதமான பங்களிப்பு இலக்குகளைச் செயல்படுத்தும் முன்னேற்றம் பற்றிய அறிக்கையைக் காலநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா.வின் கட்டுக்கோப்பு பொது ஒப்பந்தத்தின் செயலகத்திடம் நவம்பர் 11ஆம் நாள் சீனா அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தது.
சீனத் தலைமை அமைச்சர் லீக்கெச்சியாங், நவம்பர் 11ஆம் நாள் ஃபெனாம் பெனில் நடைபெற்ற 25ஆவது சீன-ஆசியான் உச்சிமாநாட்டில் உரையாற்றினார். ஆசியான் நாடுகளின் தலைவர்கள், ஆசியான் தலைமைச் செயலாளர் முதலியோரும் இதில் கலந்து கொண்டனர்.
நவம்பர் 12ஆம் நாள் 10:03, லாங்மார்ச்-7 Y6 ஏவூர்தி மூலம், தியேன் ச்சோ-5 என்ற சரக்கு விண்கலம், சீனாவின் வென் ச்சாங் விண்வெளி ஏவு மையத்திலிருந்து வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது.
வணிக வாய்ப்புகளைத் தேடிப் பார்க்கும் விதம், ஜோர்டானைச் சேர்ந்த முகமது நாசர், பல்கலைக்கழகக் காலத்தில் பகுதி நேரப் பணி மூலம் சம்பாதித்த வருவாயை எடுத்து, சீனாவின் ச்சேச்சியாங் மாநிலத்தின் யீ வூ நகருக்கு வந்தார்.
ஜி 20 உச்சி மாநாட்டில் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தி, தைவான் உள்ளிட்ட பிரச்சினைகளை விவாதிப்பார் என்று அண்மையில் அமெரிக்க அரசுத் தலைவர் பைடன் தெரிவித்தார்.
ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின், இந்தோனேசியாவில் நடைபெறவுள்ள ஜி-20 அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என்று இந்தோனேசியாவிலுள்ள ரஷிய தூதரகம் தெரிவித்துள்ளது.
திறப்பான உலகப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் விதம், வளர்ச்சி குன்றிய 10 நாடுகளிலிருந்து வரி வசூலிக்கத்தக்க 98 விழுக்காடு பொருட்களுக்கு வரி இல்லா சலுகையை சீனா வழங்க உள்ளது.
இந்திய கம்பளம் வியாபாரியான இம்ரான் ராஹ் என்பவர் 2018ஆம் ஆண்டில் முதலாவது சீன சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சியில் பங்கேற்றபோது, தனது தயாரிப்புகளை 18 சதுர மீட்டர் பரப்பளவுடைய சிறிய சாவடியில் காட்சிப்படுத்தினார்.
ரஷியாவில் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் 8ஆம் நாள் செவ்வாய்கிழமை மாஸ்கோவில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஐரோப்பிய தரப்பு பகுத்தறிவுடன் சீன-ஐரோப்பிய உறவைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ, அழைப்பின் பேரில் நவம்பர் 7ஆம் நாள் காணொளி வழியாக ஐ.நா. பொது பேரவைத் தலைவர் கொரோஸியுடன் சந்திப்பு நடத்தினார்.
தைவான், ஹாங்காங், சின்ஜியாங், திபெத் ஆகியவை தொடர்பான சீனாவின் உள் விவகாரங்கள் பற்றிய அறிக்கை ஒன்றை அண்மையில் ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள், ஜெர்மனின் முன்ஸ்டெர் நகரில் வெளியிட்டனர்.
சீன சமூக அறிவியல் கழகத்தின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சர்வதேச எரியாற்றல் பாதுகாப்பு ஆய்வு மையமும், சமூக அறிவியல் ஆவண வெளியீட்டு நிறுவனமும் 2022 உலக எரியாற்றல் வளர்ச்சி அறிக்கையைக் கூட்டாக வெளியிட்டன.
ஷாங்காய் மாநகரில் நடைபெற்று வரும் சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சியில் சீன எண்ணெய் மற்றும் இயற்கை வாயு குழாய் வலைப்பின்னல் நிறுவனம், பல சர்வதேச எரியாற்றல் நிறுவனங்களுடன் ஒத்துழைப்புகளை மேற்கொண்டுள்ளது. அத்துடன், இது, திரவ இயற்கை எரிவாயு பற்றிய ஒத்துழைப்பை மேற்கொள்ளவுள்ளது. சீனாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய் போன்ற அடிப்படை வசதிகளின் சந்தை ரீதியிலான திறப்பு முன்னேற்றத்துக்கு உதவும்.
‘இணைய வெளியில் பகிரப்பட்ட எதிர்காலம் கொண்ட சமூகத்தைக் கூட்டாக கட்டியமைப்பது’ என்ற வெள்ளை அறிக்கையைச் சீனா 7ஆம் நாள் திங்கள்கிழமை வெளியிட்டது. புதிய காலத்தில் இணைய வளர்ச்சி மற்றும் நிர்வாகம் பற்றிய சீனாவின் கண்ணோட்டங்களும் நடைமுறைகளும் இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
திபெத்-சிங்ஹெய் பீடபூமியில் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் மாற்றத்தை ஆய்வு செய்வது, இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட 2ஆவது அறிவியல் ஆய்வுப் பணியின் முக்கிய அம்சமாகும்.
தான்சானியாவின் ககேரா பிரதேசத்தின் விக்டோரியா ஏரிப் பரப்பில் நிகழ்ந்த விமான விபத்தில் இதுவரை 19 பேர் உயிரிழந்தனர் என்று அந்நாட்டு தலைமையமைச்சர் காசிம் மஜலிவா நவம்பர் 6ஆம் நாள் கூறினார்.
இந்தியாவின் தலைநகரான டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் கிட்டத்தட்ட 80 விழுக்காட்டினர் காற்று மாசுபாடு தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு புதிய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
சர்க்கரை ஏற்றுமதிக் கொள்கையைச் சரி செய்து, அடுத்த ஆண்டு மே 31ஆம் நாளுக்குள் பங்கீட்டின்படி 60 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதி அளிப்பதாக இந்திய அரசு நவம்பர் 5ஆம் நாள் அறிவித்தது.
சீன-மடகாஸ்கர் தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 50ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், நவம்பர் 6ஆம் நாள் இரு நாட்டு அரசுத் தலைவர்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துச் செய்தி அனுப்பினர்.
சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சியில் கலந்து கொண்ட வெளிநாட்டு தொழில் முனைவோர் பலர், திறப்பை மேலும் விரிவாக்குவதற்கு ஷிச்சின்பிங் அளித்த வாக்குறுதியை வெகுவாகப் பாராட்டினர்.
காலநிலை நிதியுதவிகாக ஒவ்வோர் ஆண்டும், வளரும் நாடுகளுக்கு 10,000 கோடி அமெரிக்க டாலர் வழங்க வளர்ந்த நாடுகள் உறுதியளித்துள்ளதாக இந்தியா வெள்ளிக்கிழமை மீண்டும் வலியுறுத்தியது.
பிரிக்ஸ் நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கி, உலகில் புதிதாக வளரும் முக்கிய நாடுகளின் ஏற்பாடு மற்றும் தலைமையில் உருவாக்கப்பட்ட முதலாவது சர்வதேசப் பலதரப்பு அமைப்பாகும்.
முந்தைய பொருட்காட்சியின் துவக்க விழாவில் ஷிச்சின்பிங் உரை நிகழ்த்தியபோது, திறந்த நிலையை விரிவாக்கி, ஒத்துழைப்புடன் கூட்டு வெற்றி பெற வேண்டும் என முன்மொழிந்தார். குறிப்பாக, இந்த உரைகளில், திறப்பு என்ற சொல் 100க்கும் மேற்பட்ட முறையாக குறிப்பிடப்பட்டது.
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் 1,000 ஏக்கர் பரப்பளவில் வன விலங்கு பூங்காவைக் கட்டயமைப்பதற்காகப் பொருத்தமான நிலத்தைக் கண்டறியுமாறு அரசுத் தலைவர் ரனில் விக்ரமசிங் வியாழக்கிழமை சுற்றுச்சூழல் அமைச்சருக்கு அறிவுறுத்தினார்.
சீன மற்றும் சர்வதேச மோட்டார் வாகனம் பற்றிய 20ஆவது கண்காட்சி நவம்பர் 2ஆம் நாள் சோங்கிங்கில் துவங்கியது. சீனா, அமெரிக்கா, இத்தாலி முதலிய 10க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட மோட்டார் மற்றும் வாகன நிறுவனங்கள் இக்கண்காட்சியில் கலந்து கொண்டன.
பொருளாதாரம், வணிகம், நிதி ஆகியத் துறைகளில் கியூபாவுக்கு விதிக்கப்பட்ட தடைகளை அமெரிக்கா நீக்க வேண்டும் என்ற தீர்மானம், நவம்பர் 3ஆம் நாள் ஐ.நா பொதுப் பேரவையில் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
5வது சீனச் சர்வதேச இறக்குமதி பொருட்காட்சி மற்றும் ஹாங்க்கியாவோ சர்வதேச பொருளாதார மன்றத்தின் தொடக்க விழாவில் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் காணொலி வழியாக உரை நிகழ்த்தவுள்ளார்.
அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி 75 அடிப்படை புள்ளி விகித உயர்வை நவம்பர் 3ஆம் நாள் அறிவித்தது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 100 பொருளியலாளர்களிடையில் இது குறித்து சீன ஊடகக் குழுமமும் சீனாவின் ரென்மின் பல்கலைக்கழகமும் கூட்டாக நடத்திய கணக்கெடுப்பில், வட்டியை அமெரிக்கா தொடர்ச்சியாக அதிகரிப்பது, உலகளாவிய வீழ்ச்சியைத் தீவிரமாக்கக் கூடும் என்றும் பொருளாதாரத் தேக்க வீக்கத்தின் ஆபத்து அதிகரித்து வருகின்றது என்று அவர்களில் 90 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர்.
சீனத் துணைத் தலைமையமைச்சர் ஹான் ஜெங் சிங்கப்பூரில் நவம்பர் 1ஆம் மற்றும் 2ஆம் நாட்களில் பயணம் மேற்கொண்டார். சிங்கப்பூர் அரசுத் தலைவர் ஹாரி மேக் ஜேக்கப்ஸ், தலைமையமைச்சர் லீ ஹ்சியன் லூங், துணைத் தலைமையமைச்சர் வாங் ரூஜி முதலியோருடன் அவர் சந்திப்பு நடத்தினார்.
இத்திங்களின் பிற்பாதியில் சில்லறைத் துறையில் டிஜிட்டல் நாணயம் சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்படும் என இந்திய மத்திய வங்கியின் இயக்குநர் சக்திகந்தா டாஸ் புதன்கிழமை தெரிவித்தார்.
2022ஆம் ஆண்டின் அக்டோபம் 31ஆம் நாள், குய் சோ மாநிலத்தில் உள்ள மியாவ் மற்றும் துங் இனத் தன்னாட்சி மாவட்டத்தின் கிராமம் ஒன்றில் நீள மேசை விருந்து நடத்தப்பட்டது. உள்ளூர் மக்கள் இப்பாரம்பரிய விழாவைக் கூட்டாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
2022ஆம் ஆண்டின் நவம்பர் 2ஆம் நாள், எகிப்தின் கெய்ரோவில் பிரமிடு வான்குடை மூலம் தரை இறங்கும் விழா நடைபெற்றது. 16 நாடுகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட வீரர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
சீனாவின் ச்சங் து மாநகரின் ச்சொங் ச்சோ நகரில் அமைந்துள்ள டோ மிங் வட்டம், பொருட்சாரா மரபு செல்வமான மூங்கில் பின்னல் கலையால் புகழ் பெற்றது. அதிலுள்ள மூங்கில் கலை ஊர், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளின் வருகையை ஈர்த்து வருகிறது.
ஐ.நா.வின் பெரும்பாலான உறுப்பு நாடுகள் சீனாவுக்கு ஆதரவு அளித்ததோடு, மனித உரிமையைக் காரணமாகக் கொண்டு சீனாவின் உள்விவகாரங்களில் தலையீடு செய்வதை எதிர்ப்பதாகவும் தெரிவித்துள்ளன.
சீன தலைமை அமைச்சர் லீக்கெச்சியாங் நவம்பர் முதல் நாள் பெய்ஜிங்கில் காணொளி வழியாக, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 21வது தலைவர்கள் செயற்குழு கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார்.
இந்தியாவின் உற்பத்தி கொள்முதல் மேலாளர்களின் குறியீடு செப்டம்பரில் 55.1 இல் இருந்து அக்டோபரில் 55.3 ஆக உயர்ந்துள்ளது. தொழிற்சாலைகளின் விரிவாக்க நடவடிக்கைகள், தொழிலாளர்களை பணியமர்த்துவதற்கு வழிவகுத்தது இவ்வுயர்வுக்கு காரணமாக கருதப்படுகிறது.
இந்திய வாகன நிறுவனங்கள் அக்டோபர் மாதத்தில் வலுவான விற்பனையைப் பதிவு செய்துள்ளதாக, பங்குச் சந்தைகளில் பெருநிறுவனங்கள் தாக்கல் செய்த தரவுகள் காட்டுகின்றன.
குஜராத் மாநிலம் மோர்பி நகரில் தொங்கு பாலம் உடைந்து விபத்துக்குள்ளானது குறித்து சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ, அக்டோபர் 31ஆம் நாள் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கருக்கு ஆறுதல் செய்தி அனுப்பினார்.